Home /News /entertainment /

சித்து-ஸ்ரேயா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்துகள்!

சித்து-ஸ்ரேயா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்துகள்!

சித்து - ஸ்ரேயா

சித்து - ஸ்ரேயா

சமீபத்தில் கூட MG காரின் டாப் மாடலை சித்து சுமார் 23 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர்கள் வீட்டில் இன்னொரு விசேஷம் நடந்துள்ளது.

    சீரியல் பிரபலம் சித்து - ஸ்ரேயா வீட்டில் தற்போது விசேஷம் ஒன்று நடந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    2018-ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியான திருமணம் என்ற தொடரில் சந்தோஷ் என்ற பெயரில் நடித்திருந்தார் சித்து. இந்த சீரியலில் கதாநாயகியாக ஸ்ரேயா அஞ்சன், ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களது காம்பினேஷன் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்டது.

    தற்போது சித்து விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாகவும், ஜனனி ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் ரஜினி சீரியலில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர்கள், தங்களைப் பற்றிய அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள். அதோடு யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

    இது தான் விஜய்யின் சொகுசு பங்களாவா? கவனம் பெறும் புகைப்படம்!

    சமீபத்தில் கூட MG காரின் டாப் மாடலை சித்து சுமார் 23 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர்கள் வீட்டில் இன்னொரு விசேஷம் நடந்துள்ளது. அதாவது ஸ்ரேயாவின் தங்கை பிரியா அஞ்சனுக்கு திருமணம் நடந்துள்ளது. 5 வாரங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.




    ராஜா ராணி 2 சித்து மனைவி ஷ்ரேயாவுடன் வாங்கிய பிரம்மாண்ட கார் - விலையை கேட்டா அசந்து போவீங்க!

    இதனை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரேயா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv, Zee tamil

    அடுத்த செய்தி