சீரியல் நடிகை ஹரிப்ரியாவுடன் மணமுறிவு ஏற்பட்ட பிறகு, வீடியோ ஒன்றில் பேசிய அவரது முன்னாள் கணவர் விக்னேஷ் குமார், காதலிப்பவர்கள் தங்கள் காதலரின் ஃபோன் பேட்டர்னை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியது இணையத்தில் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
பலருக்கும் ஃபேவரைட் சீரியலான விஜய் டிவி-யின் கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமாகி, இப்போது சன் டிவி-யின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும், எதிர் நீச்சல் சீரியலிலும் நடித்து வருபவர் நடிகை ஹரிப்ரியா. பிரியமானவளே சீரியலில் வந்த இசை என்றால் அனைவருக்கும் சட்டென ஞாபகம் வரும்.
முதன் முதலில்
கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் தனது நடிப்பை தொடங்கியிருக்கிறார் ஹரிப்ரியா. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த எல்லாரும் பிரபலம் ஆனது போல பின்னாளில் இவரும் பிரபலமாகி இருக்கிறார். அந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு ஜீ தமிழில், ’மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்’ என்னும் சீரியலில் நடித்தார். இந்த
சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் விக்னேஷ் குமார்.
’வாணி ராணி’ சீரியலில் நடிக்கும் போது இது காதலாக மாறியிருக்கிறது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு சாய் பிரித்வி என்ற மகனும் இருக்கிறான். வாழ்க்கை அழகாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து, இறுதியாக விவாகரத்தும் பெற்றனர்.
படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!
விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த ஹரிப்ரியா, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சன் டிவி தொகுப்பாளர் அசாருடன் இணைந்து ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனால் விக்னேஷ் - ஹரிப்ரியா விவாகரத்திற்கு அசார் தான் காரணம் என்றனர் ஒரு தரப்பினர். ஆனால் இதை மறுத்த ஹரிப்ரியா, அசார் தனது நண்பர் என்றார்.

வி.ஜே.அசாருடன் ஹரிப்ரியா
சன் டிவி எதிர்நீச்சல் சீரியலால் வெடித்த சர்ச்சை... இயக்குநர் திருச்செல்வம் சொல்வது என்ன?
இந்நிலையில் விக்னேஷ் குமார் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதில் காதல் பற்றி பேசிய விக்னேஷ், காதலிப்பவர்கள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும். ஒருவருடைய ஃபோன் பேட்டர்ன் இன்னொருவருக்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவு தான், எனத் தெரிவித்திருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.