ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Venu Arvind: வேணு அரவிந்த் நினைவுடன் இருக்கிறார் - வீடியோ வெளியிட்ட பிரபலம்!

Venu Arvind: வேணு அரவிந்த் நினைவுடன் இருக்கிறார் - வீடியோ வெளியிட்ட பிரபலம்!

வேணு அரவிந்த்

வேணு அரவிந்த்

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் அருண் ராஜன் இதனை மறுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சீரியல் நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என நடிகர் அருண் ராஜன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அலைபாயுதே, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள வேணு, ’சபாஷ் சரியான போட்டி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

வேணு அரவிந்துக்கு கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் தற்போது அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் இதனை மறுத்துள்ளார்.


இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அருண், ” நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என்றும் அவர் தற்போது நினைவுடன் தான் இருக்கிறார் என்றும், தனக்கு செய்யப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்து வருகிறார் என்றும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தொடர்ந்த அருண், தான் சில நிமிடங்களுக்கு முன்னர் தான் வேணுவின் மனைவி ஷோபா அவர்களிடம் பேசியதாகவும், தற்போது அவர் மிகவும் நலமாக இருப்பதாகவும், கண்டிப்பாக முழு குணமாகி வீடு திரும்பி விடுவார் என்று தெரிவித்ததாகவும் கூறினார். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது உண்மைதான் என்று குறிப்பிட்ட அருண் ராஜன், ஆனால் தற்போது வேணு நலமாக இருப்பதாகவும் தயவுசெய்து அவர் கோமாவில் இருப்பது போன்ற தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும், அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial