ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Venu Arvind: நான் செஞ்ச பாவம்... உடல்நிலை குறித்து உருக்கமாக பேசிய சீரியல் நடிகர் வேணு அரவிந்த்

Venu Arvind: நான் செஞ்ச பாவம்... உடல்நிலை குறித்து உருக்கமாக பேசிய சீரியல் நடிகர் வேணு அரவிந்த்

அரவிந்த் வேணு

அரவிந்த் வேணு

நான் நிறைய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாவத்தை சம்பாதித்துவிட்டேன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தற்போது தான் நலமாக உள்ளதாக நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அலைபாயுதே, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள வேணு, ’சபாஷ் சரியான போட்டி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

    கடந்த வருடம் வேணு அரவிந்துக்கு கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது. பின்னர் சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் இதனை மறுத்தார்.

    ஆண் குழந்தைக்கு தாயான கயல் சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துகள்!

    இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ள வேணு அரவிந்த், “நான் இப்போது உயிரோடு இருக்கிறேன், இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம். எனக்கு தலையில் சின்ன கட்டி இருந்தது, தற்போது அதை நீக்கிவிட்டார்கள். இப்போது நலமாக உள்ளேன். நான் நிறைய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாவத்தை சம்பாதித்ததால் தான் எனக்கு இப்படி நடக்கிறதோ என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial