செய்திவாசிப்பாளர் கண்மணி மற்றும் அவரின் வருங்கால கணவர் இதயத்தை திருடாதே நவீன், பீஸ்ட் மோடில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சமீப காலமாக பல சின்னத்திரை பிரபலங்கள் அந்த துறையில் உள்ளவர்களையே காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். இது போன்ற பல திருமணங்களை நாம் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். அந்த வகையில் தற்போது இன்னொரு சின்னத்திரை காதல் ஜோடிகள் திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர். பிரபல சின்னத்திரை நடிகரான நவீன் மற்றும் செய்தி வாசிப்பாளரான கண்மணி ஆகிய இருவரும் காதலித்து வருவது பற்றி பலரும் அறிந்திருக்க கூடும். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பிரபல முன்னாள் சீரியல் நடிகை!
அதன் பின்பு இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நவீனுக்கு சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நடித்து வருகிறார். கண்மணியின் க்யூட்டான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஏராளமானோரைக் கவர்ந்திழுந்துள்ளது. குறிப்பாக அவருடைய ஹேர் ஸ்டைல் மற்றும் புடவையை பார்ப்பதற்காகவே காத்திருப்பவர்கள் ஏராளம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தங்களை நீக்கக் கோரி வருமான வரித்துறை மனு
இவர்கள் இவருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். அதன்படி, தற்போது திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளனர். இந்த அறிவிப்பை அறிந்த சின்னத்திரையினர் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போன்று ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழா நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பங்கேற்றிருந்தனர். அதில் அவர்கள் தங்கள் திருமணத்தை குறித்து அறிவிப்பை தந்துள்ளனர்.
இந்நிலையில், சமீப காலமாக ஷாப்பிக், மூவி,பார்ட்டி என எல்லா பொது இடங்களிலும் ஒன்றாகவே கலந்து கொள்ளும் இந்த ஜோடி, பீஸ்ட் படத்தையும் ஜோடியாக சேர்ந்து பார்த்துள்ளனர். அதுவும் ஒரே மாதிரியான உடை, பீஸ்ட் பெயர் பொதித்த கறுப்பு நிற டீ ஷர்ட்டில் ஜோடியாக சேர்ந்து பார்த்துள்ளனர். இதுதான் இவருவரின் பீஸ்ட் மோட். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இருவரில் யார் விஜய் ஃபேன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். விசாரித்த வரையில் இருவரும் வெறித்தனமான விஜய் ஃபேன்ஸ் தான்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.