• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் சன் டிவி-க்கு திரும்பிய ஈஸ்வர்!

மீண்டும் சன் டிவி-க்கு திரும்பிய ஈஸ்வர்!

ஈஸ்வர்

ஈஸ்வர்

அருவி சீரியலில் லாவண்யா, கிருத்திகா லட்டு, கார்த்திக் வாசு ஜோவிதா லிவிங்ஸ்டன், சூப்பர்குட் கண்ணன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது.

  • Share this:
    சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஈஸ்வர் ரகுநாதன். குறிப்பாக கல்யாணப்பரிசு தொடர் இவருக்கு மிகப்பெரிய புகழையும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து தற்போது ஈஸ்வர் ரகுநாதன் சன் டிவியின் சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    அருவி என்ற புத்தம் புதிய மெகா சீரியல் சன் டிவியில் அக்டோபர் 18 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் முக்கிய பாத்திரங்களில் ஒருவராக ஈஸ்வர் ரகுநாதனும் நடித்து வருகிறார். மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியிருக்கும் அருவி சீரியலில் நடிகை அம்பிகாவின் மூத்த மகனாக ஈஸ்வர் நடிக்கிறார்.

    இந்தப் புதிய தொடரில் ஈஸ்வர் ரகுநாதனின் பாத்திரம் மிகவும் பாராட்டப்படும் மற்றும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் இயற்பெயரான ஈஸ்வர் தான் அருவி சீரியலில் கதாபாத்திரத்தின் பெயராகவும் சூட்டப்பட்டுள்ளது.

    சீரியல் அம்மாக்கள் மட்டுமின்றி எல்லா அம்மாக்களுக்குமே தன்னுடைய மகன் தன் பேச்சை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆசையும் இருந்து கொண்டே தான் இருக்கும். அதை நிறைவேற்றும் வண்ணம் அருவி தொடரில் அம்மா சொல்லை தட்டாத பாத்திரத்தில் ஈஸ்வர் ரகுநாதன் அம்பிகாவின் மூத்த மகனாக நடிக்கிறார்.

    சீரியலில் வாய்ப்பு கிடைத்திருப்பதை பற்றி மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக ஈஸ்வர் ரகுநாதன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 18 முதல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள நிலையில் ஏற்கனவே சக நடிக நடிகைகளுடன் நல்ல உறவை வளர்த்துள்ளதை படப்பிடிப்பு தளத்தில் ஈஸ்வர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் காட்டுகிறது.

    படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். ரகுநாதன் பகிர்ந்த புகைப்படங்கள் இங்கே.

    அருவி சீரியலில் லாவண்யா, கிருத்திகா லட்டு, கார்த்திக் வாசு ஜோவிதா லிவிங்ஸ்டன், சூப்பர்குட் கண்ணன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது. கதைப்படி ஹீரோ ரகுநாதனின் இளைய சகோதரர்களாக கார்த்திக் வாசு மற்றும் சாம் நடிக்கிறார்கள்.




    கல்யாணப் பரிசு சீரியலில் சூர்யா என்ற பாத்திரம் மூலம், ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார் ஈஸ்வர். நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை, பூவே பூச்சூடவா, ராஜா ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் ஈஸ்வர் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், காட்டுவாசிகள் தலைவராக திருமதி ஹிட்லர் சீரியலில் இவர் நடித்த கேமியோ பாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.




    அருவி சீரியலின் நாயகியாக, அருவியாக நடிப்பவர் நடிகர் லிவிங்க்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்க்ஸ்டன். பூவே உனக்காக சீரியலில் கீர்த்தி என்ற பாத்திரத்தில் அறிமுகமானவர் ஜோவிதா. அருவி தொடரில் இவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பது கார்த்திக் வாசு. சன் டிவியில் அருவி சீரியல் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: