சின்னத்திரையில் நடிக்க வேண்டுமென்றால் ஒரு காலத்தில் பல வித விஷயங்களை செய்தாக வேண்டி இருந்தது. ஆனால், தற்போது அப்படிப்பட்ட நடைமுறைகள் எல்லாம் வேண்டியதாக இல்லை. அதாவது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், ஏதேனும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தால் போதும்.
அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில் ஸ்டாராக புகழ் பெற்றுவிட்டால், எளிதில் சின்னத்திரையிலும் இடம் பிடித்து விடலாம். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி இருப்பதால், மக்களின் மனதில் இடம்பிடித்து விட முடியும் என்பதால் தான் அவர்களுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறியவர்கள் பலர். அந்த வகையில் யூடியூப்பில் பல வீடியோக்களை பதிவிட்டு அதிக ஃபாலோவர்ஸை கொண்டவர் தான் இனியன். இவர் தனது யூடியூப் சேனலில் பலவித நடன வீடியோக்கள், காமெடி வீடியோக்களை பதிவிட்டு வந்தார். தற்போதும் இது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் யூடியூப்பில் உள்ளது.
இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வித்யா நம்பர் 1' தொடரில் சஞ்சய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்ததால் இந்த சீரியலில் இருந்து அவர் விடை பெற உள்ளார். எனவே இவருக்கு பதிலாக இந்த தொடரில் தயாரிப்பாளர்கள் வேறு ஒருவரை ஏற்கனவே தேர்வு செய்து உள்ளனர்.
அதன்படி, ' ஒரு ஊருல ராஜகுமாரி' சீரியலில் நடித்த புவியரசன் இனியனுக்கு பதிலாக சஞ்சய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இனியன் தனது சமூக ஊடக கணக்கில் வீடியோவை பதிவிட்டு இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் வித்யா No.1 தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Also Read : பிரபல எஃப்எம்-ல் ஆர்.ஜே-வான சிவாங்கி! அதுவும் அவார்டோடு...
வித்யா நம்பர்.1 தொடரானது புது வகையான கதையை கொண்டது. இது ஒரு கிராமத்துப் பெண்ணான வித்யாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையாகும். அவர் படிக்காதவராக இருந்தாலும் வெற்றிகரமான பெண்ணாக இருக்கிறார். இருப்பினும், வேதவள்ளியின் மகன் சஞ்சய்க்கு திருமணமான பிறகு அவள் வாழ்க்கை முற்றிலும் மாறி விடுகிறது. வேதவள்ளி, பல கல்வி நிறுவனங்களைச் சொந்தமாக வைத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கை மட்டுமே கொண்ட உயர் கல்வியறிவு பெற்றவர்.
Also Read : ஆர்ஆர்ஆர் பட நடிகை ஆலியா பட்டின் அசத்தல் படங்கள்..
மாமியார் மற்றும் மருமகளின் மாறுபட்ட கண்ணோட்டங்களின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இந்த தொடர் அமைந்துள்ளது. அதே போன்று இந்தத் தொடர் டிஆர்பி ரேட்டிங் நிலையான உயர்வைக் பெற்று வருகிறது. வேதவள்ளியின் மகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் தான் யூடியூப் பிரபலம் இனியன் நடித்து வந்திருந்தார். இவருக்கு ஜோடியாக தேஜஸ்வினியும், அம்மா பாத்திரத்தில் நிஹாரிகாவும் முறையே மாமியார் மற்றும் மருமகளாக நடித்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.