ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி.. சாட்சி கையெழுத்து போட்ட சீரியல் நடிகர்!

திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி.. சாட்சி கையெழுத்து போட்ட சீரியல் நடிகர்!

சின்னத்திரை ஜோடி

சின்னத்திரை ஜோடி

பெரோஸ்கான் - ஏகவள்ளி ஜோடியை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் நடிகர் அம்ருத் கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்னத்திரை பிரபலங்களான பெரோஸ்கான் - ஏகவள்ளி தங்களது நீண்ட நாள் காதல் உறவை திருமணத்தில் முடித்துள்ளனர். இதுக் குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளன.

  அபூர்வராகம், தென்றல், கேளடி கண்மணி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஏகவள்ளி. இவரின் சகோதிரி யமுனாவும் சின்னத்திரை நடிகை தான். சன் டிவி , விஜய் டிவி, ஜெயா டிவியில் இருவரும் பல தொடர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை ஏகவள்ளி மதமாறி விட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. அதாவது சின்னத்திரை நடிகர் பெரோஸ்கானை ஏகவள்ளி சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

  ஷிவானியின் இன்ஸ்டா உலகம்.. பட வாய்ப்புக்காக இப்படியா? என கேட்கும் ரசிகர்கள்!

  இதனால் ஏகவள்ளி முஸ்லீம் மதத்திற்கு மாறினார் எனவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் பெரோஸ்கானுக்கும் ஏகவள்ளிக்கும் திருமணம் நடந்து முடிந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை. திருமணம் குறித்த முழு விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி இருக்கிறார் பிரபல சீரியல் நடிகர் அம்ருத் கலாம்.


  இவர்  ஏகவள்ளி - பெரோஸ்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து அதில் ”ஸ்வீட் அண்ட் சிம்பிள் திருமணம்” என கேப்ஷன் கொடுத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஏகவள்ளி ”சாட்சி கையெழுத்துக்கு நன்றி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். எனவே இவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டது நடிகர் அம்ருத் கலாம் என்பது ரசிகர்களுக்கு  தற்போது தெரிய வந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Vijay tv