வருங்கால மனைவிக்கு சீரியல் நடிகரின் பிரைடல் ஷவர் சர்ப்ரைஸ்!

வருங்கால மனைவியுடன் அவினாஷ்

அவினாஷ் தனது வருங்கால மனைவி ட்ரெசா ஜோசப்புக்கு ரகசியமாக பிரைடல் ஷவர் ஏற்பாடு செய்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

 • Share this:
  சர்ப்ரைஸ் ‘பிரைடல் ஷவர்’ மூலம் தனது வருங்கால மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் சீரியல் நடிகர் அவினாஷ்.

  பிரபல நடனக் கலைஞர் அவினாஷ் அசோக், டிவி சீரியல்கள் மற்றும் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கு கொண்டு பெயர் பெற்றவர். சன் டிவி-யின் அழகு சீரியலில் தனது நடிப்பால் நன்கு அறியப்பட்ட இவர், ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்தி சீரியலில் தான் நடிக்கும் விஷயத்தை சமீபத்தில் அறிவித்தார்.

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘அம்மன்’ சீரியலில் அரவிந்த் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் அவினாஷ். அதோடு டான்ஸ் கேரள டான்ஸ், லிட்டில் மாஸ்டர், டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0, தில்லானா தில்லானா மற்றும் ஓடி விளையாடு பாப்பா (சீசன் 1 மற்றும் 2) போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் தனது காதலியை சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
  இப்போது, இந்த ஜோடி மீண்டும் ஒரு ரொமாண்டிக் பிரைடல் ஷவர் படங்களுடன் இணையத்தில் பேசு பொருளாகியிருக்கிறார்கள். அவினாஷ் தனது வருங்கால மனைவி ட்ரெசா ஜோசப்புக்கு ரகசியமாக பிரைடல் ஷவர் ஏற்பாடு செய்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

  “தற்போதைய சூழ்நிலை காரணமாக, எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, திருமணத்திற்கு முந்தைய விருந்து கொடுக்க முடியவில்லை, அதே நேரத்தில் வீட்டில் ஏற்பாடு செய்த விருந்துடன் என்னை ஆச்சரியப்படுத்த தவறவில்லை” என ட்ரெசா தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

  இதையடுத்து அவினாஷ் - ட்ரெசா ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: