Home /News /entertainment /

டாக்டர் பாரதி ஒரு சகுனியாம்.. சொன்னது யாரு கண்ணம்மா தான்!

டாக்டர் பாரதி ஒரு சகுனியாம்.. சொன்னது யாரு கண்ணம்மா தான்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போவதாக , கிளைமேக்ஸ் இதுதான் என ஏகப்பட்ட வதந்திகள் பரவின

    கடந்த வாரம் பாரதி கண்ணம்மா புரமோவை பார்த்து, எபிசோடுக்காக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். ட்விட்ஸ்ட் என்ற பெயரில் இயக்குனர் பிரவீன் கொடுத்த சஸ்பென்ஸ் ஆடியன்ஸை கடுப்பாக்கியது. ஏற்கெனவே இதுதான் நடக்கும் என கணித்திருந்த ரசிகர்கள் இந்த சீரியலும் முடியாது, பாரதி DNA டெஸ்டும் எடுக்க மாட்டார் என்று சலிப்புடன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்களுக்கே இப்படி கடுப்பு என்றால், கண்ணம்மா நிலைமையை கேட்கவா வேண்டும்? அவரும் பாரதி மீது செம்ம கடுப்பில் இருக்கிறார். அந்த கோபத்தை தன்னுடைய மாமியார், பாரதியின் அம்மாவான சவுந்தர்யாவிடம் காட்டுகிறார். அதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

    பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி திடீரென்று கண்ணம்மாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதில் மீண்டும் உன்னை மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதற்கு ஒரு கன்டிஷன் என்றார்.அது என்னவாக இருக்கும் என மொத்த குடும்பமும் ஷாக் ஆகினர். இதே காட்சிகளை வைத்து புரமோவும் வெளியானது. இதனால் ரசிகர்களும் ஆவலுடன் என்ன கன்டிஷன் அது? என தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தனர். அதற்குள் இணையதளங்களில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போவதாக , கிளைமேக்ஸ் இதுதான் என ஏகப்பட்ட வதந்திகள் பரவின. ஆனால் ரெகுலராக சீரியலை பார்ப்பவர்களுக்கு தெரியும் இது இப்போதைக்கு முடியாது என்று.

    இதையும் படிங்க.. யாஷிகாவுடன் பிரேக்கப் ஆனது உண்மையா? பிக் பாஸ் நிரூப் சொன்ன அதிர்ச்சி கலந்த உண்மை!-

    இயக்குனர் வைத்த ட்விஸ்டும் கடைசியில் அப்படி தான் இருந்தது. கண்ணம்மாவே தனது வாயால் நான் தப்பானவள் என ஒத்துக் கொள்ள வேண்டும் என பாரதி கன்டிஷன் போடுகிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். கண்ணம்மா, கை எடுத்து கும்மிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். கண்ணம்மாவின் அப்பா, அகில், சவுந்தர்யா என மொத்த குடும்பமும் பாரதியை திட்டி தீர்க்கின்றனர்.

    இதையும் படிங்க.. ஐஸ்வர்யா சொன்ன ஒரே ஒரு வார்த்தை... தேம்பி தேம்பி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!



    இந்நிலையில், மீண்டும் கண்ணம்மாவிடம் சமாதானம் பேச சவுந்தர்யா வீட்டுக்கு செல்கிறார். அப்போது தான் கண்ணம்மா பொங்கி வெடித்து பாரதியை சரமாரியாக திட்டி தீர்க்கிறார். பாரதி சகுனி என்றும், நம்பிக்கை வைக்க தெரியாத ரோபாட் என சவுந்தர்யாவிடம் கூறுகிறார். பாரதி போட்ட கன்டிஷனை கேட்டதும் அவரை ஓங்கி அடிக்கும் அளவுக்கு கோபம் வந்து விட்டதாக கண்ணம்மா கூறுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய புரமோவில் இடம்பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி