ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கர்ப்பிணி மனைவியான சீரியல் நடிகையை அடித்ததாக குற்றச்சாட்டு.. கைதாகிறாரா அரணவ்?

கர்ப்பிணி மனைவியான சீரியல் நடிகையை அடித்ததாக குற்றச்சாட்டு.. கைதாகிறாரா அரணவ்?

அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர்

அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர்

அரணவ் முன் ஜாமீன்  தாக்கல் செய்துள்ளாரா ? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சின்னத்திரை நடிகர் அரணவ் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை என்றால் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சின்னத்திரை நடிகர் அரணவ் அவரது காதல் மனைவி கர்ப்பிணியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தியாக அளித்த புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அரணவ் மீது கொலை மிரட்டல், பென் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருடனான பிரச்னை... சீரியல் நடிகர் அர்னாவிற்கு சம்மன்

இந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை போலீசார் தெரிவித்தும் அரணவ் விசாரணைக்கு ஆஜராகாததால்

இன்று விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அமைப்பி உள்ளனர். தற்போது போலீசார் அனுப்பிய சம்மனை அர்ணவ் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பாக பதிவு தபாலையும் செல்போனிலும் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை அவர் பெற்று கொண்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் அரணவ் கைதாக வாய்ப்பு உள்ளதாகவும் அரணவ்வை கைது செய்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கர்ப்பமான கயல் சீரியல் நடிகை.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்!

மேலும் அரணவ் முன் ஜாமீன்  தாக்கல் செய்துள்ளாரா ? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial, Vijay tv