வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் கைது

ஆதித்யன் - அம்பிலி

ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4-வது மனைவி

  • Share this:
    வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    சுமதி ராம் இயக்கிய'விஸ்வத்துளசி' திரைப்படம் 2004-ஆம் ஆண்டில் வெளியானது. இதில் மம்முட்டி, நந்திதா தாஸ், மனோஜ் கே ஜெயன் மற்றும் மணிவண்ணன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் நந்திதா தாஸின் சிறு வயது கதாபாத்திரத்தில் அம்பிலி தேவி என்பவர் நடித்திருந்தார். பின்னர் அவர் மலையாளத்தில் பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தார்.

    அம்பிலி திருவனந்தபுரத்தை சேர்ந்த திரைப்பட-சீரியல் கேமராமேன் லோவலை 2009-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அமர்நாத் என்ற மகனும் இருக்கிறார். பின்னர் கடந்த 2014-ஆம் ஆண்டில் தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டனர். பின்னர் சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயின் என்பவரை காதலித்து 2019-ல் திருமணம் செய்து கொண்டார் அம்பிலி. அதே ஆண்டில் அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Adithyan Jayan, Ambili, serial actor adithyan jayan, Adithyan Jayan Ambili, Adithyan Jayan Ambili issue, adithyan jayan greeshma, adithyan jayan first marriage photos, adithyan jayan son, adithyan jayan age, serial actor adithyan, ambili devi adithyan, ambili devi adithyan issue, ambili devi adithyan marriage, ambili devi adithyan latest news, ambili devi first marriage, ambili devi facebook, ambili devi family photos, ambili devi adithyan marriage, ambili devi adithyan wedding, ambili devi latest news, adityan and ambili devi, adithyan jayan, ஆதித்யன் ஜெயன், அம்பிலி, அம்பிலி தேவி ஆதித்யன், சீரியல் நடிகர் ஆதித்யன், சீரியல் நடிகர் ஆதித்யன் கைது, ஆதித்யன் அம்பிலி பிரச்னை

    ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4-வது மனைவி ஆவார். இதுபோல் அம்பிலிக்கும் ஆதித்யன் 2-வது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் குடும்பப் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. அப்போது ஆதித்யனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அது தான் கர்ப்பமானதும் தான் தெரிய வந்தது எனவும் அம்பிலி தெரிவித்தார்.

    ஆதித்யன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் பெண்ணுக்கு ஏற்கனவே 13 வயதில் குழந்தை இருப்பதாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தான் கள்ள தொடர்பு கொண்டிருக்கும் பெண்ணின் கர்ப்ப கால ஸ்கேன் ரிப்போர்ட்டை பேஸ்புக்கில் வெளியிடும் அளவிற்கு ஆதித்யன் சென்றிருந்தார்.

    இதையடுத்து ஆதித்யன் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், பரஸ்பர சம்மதத்தின் மூலம் அவரை விவாகரத்து செய்யும்படி கட்டாயப்படுத்துவதாகவும் அம்பிலி போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் தற்போது ஆதித்யன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: