அந்த சீரியலை காப்பி அடிக்கிறதா விஜய் டிவி? புது ரூட்டில் செந்தூரப்பூவே சீரியல்!

விஜய் டிவி செந்தூரப்பூவே சீரியல்

டி.ஆர் போல் இந்த சீரியலில் ரஞ்சித் ஹீரோயினை தொடாமலே நடித்து இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடித்தார்.

 • Share this:
  senthoora poove vijaytv serial : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலின் புரமோவை ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். காரணம், ஜீ தமிழில் ஒளிப்பரபான சீரியலின் சாயலாக இதுவும் இருப்பதே.

  விஜய் டிவியில் லாக்டவுனுக்கு முன்பே புரமோ போட்டப்பட்டு கிட்டத்தட்ட 1 வருடங்களுக்கு பின்பு ஒளிப்பரப்பாக தொடங்கிய சீரியல் தான் செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித் துரை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குடும்பத்தின் கட்டாயத்தால் ரோஜா டீச்சரை 2 வது திருமணம் செய்துகொள்ளும் துரை அவருடன் சேர்ந்து வாழ முடியாமல் விலகி செல்கிறார். அந்த நேரத்தில் தான் ரோஜாவின் பிளாஷ்பேக் அவருக்கு தெரிய வருகிறது. அதாவது ரோஜா ஏற்கெனவே காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர் , அவர் கர்ப்பமாக இருக்கிறார். அவரின் மாமாவிடம் இருந்து தப்பிக்க துரையை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார் என அனைத்து உண்மைகளும் துரைக்கு தெரிய இருவரும் பிரிய முடிவு எடுக்கின்றனர்.

  also read சொப்பன சுந்தரி’ பெயர் தான் பவித்ராவின் வாழ்க்கையையே மாற்றியது! சன் டிவி நிலா ஷேரிங்க்ஸ்

  ஆனால் எதோ ஒரு சந்தர்பம் அவர்களை தொடர்ந்து சேர்ந்தே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. இது பிடிக்காமல் ஐஸ்வர்யா துரை- ரோஜாவை பிரிக்க நினைக்கிறாள். துரைக்கும் ரோஜாவுக்கு அதிக வயது வித்யாசம் வேறு. டி.ஆர் போல் இந்த சீரியலில் ரஞ்சித் ஹீரோயினை தொடாமலே நடித்து இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடித்தார்.

  கடந்த 2 வாரங்களுக்கு மேலாக துரை அருணா (ப்ரியா ராமன்) இருவரும் வாழ்ந்த வாழ்க்கை பற்றி பிளாஷ்பேக் பகுதிகள் ஒளிப்பரப்பாகி வந்தனர். இதை கூட ரசிகர்கள் “செந்தூரப்பூவே செம்பருத்தி” மெகா சங்கமம் என கலாய்த்து தள்ளினர். இந்நிலையில், ப்ரியா ராமன் இடம்பெற்ற காட்சிகள் முடிந்துவிட்டது என நினைத்திருந்த ரசிகர்களுக்கு புரமோ மூலம் ட்விஸ்ட் தந்தார் இயக்குனர். இப்போது ப்ரியா ஆவியாக மாறி ரோஜாவை காப்பாற்றுவது போல் அவளுக்கு துணையாக நிற்பது போல புரமோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  இந்த நேரத்தில் இதே ஒன்லைனில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வந்து இருக்கும். அதிலும் அப்படி தான், முத்தரசன் மனைவியை மாமியார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொன்று விடுவார்கள். ஆனால் அவள் ஆவி ஆகி வீட்டையே சுற்றி சுற்றி வருவாள். இந்த நேரத்தில் தான்
  ஸ்வேதா வெண்ணிலா என இரண்டு அத்தை பெண்கள் முத்தரசனை திருமணம் செய்துகொள்ள போட்டி போடுவார்கள். வெண்ணிலாவை கொள்ள ஸ்வேதா ஏகப்பட்ட திட்டங்கள் போடுவார். அந்த நேரத்தில் எல்லாம் முத்தரசனின் மனைவி ஆவியாக வந்து வெண்ணிலாவுக்கு உதவி செய்து அவளைக் காப்பாற்றுவாள். ஆரம்பத்தில் பேய் சீரியலாக ஒளிப்பரப்பான இந்த தொடர் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை சந்தித்து தற்போது கூடிய விரைவில் முடியவிருக்கிறது.

  இந்த நேரத்தில் தான் ஆரம்பத்தில் குடும்ப சீரியலாக தொடங்கப்பட்ட செந்தூரப்பூவே சிரியல் பலத்த ட்விஸ்டுகளுடன் பேய் ரூட்டுக்கு மாறியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: