Home /News /entertainment /

காணாமல் போன ரோஜா குழந்தை.. துரைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

காணாமல் போன ரோஜா குழந்தை.. துரைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

ரோஜா - துரை

ரோஜா - துரை

செந்தூரப்பூவே சீரியலில் மிகப் பெரிய ட்விஸ்டாக ராஜாவின் அம்மாவிடம் ரோஜாவின் குழந்தை கிடைக்கிறது

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலின் இன்றைய எபிசோடில் ரோஜாவுக்கு மட்டுமில்லை சீரியலை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் ஒரு ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது.

    திரைப்பட பெயர்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.அந்த வரிசையில் விஜய் டிவியில் லாக்டவுனுக்கு முன்பே புரமோ போட்டப்பட்டு கிட்டத்தட்ட 1 வருடங்களுக்கு பின்பு ஒளிப்பரப்பாக தொடங்கிய சீரியல் தான் செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித் துரை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குடும்பத்தின் கட்டாயத்தால் ரோஜா டீச்சரை 2 வது திருமணம் செய்துகொள்ளும் துரை அவருடன் சேர்ந்து வாழ முடியாமல் விலகி செல்கிறார். அந்த நேரத்தில் தான் ரோஜாவின் பிளாஷ்பேக் அவருக்கு தெரிய வருகிறது. அதாவது ரோஜா ஏற்கெனவே காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர் , அவர் கர்ப்பமாக இருக்கிறார். ரோஜாவின் பாசத்தை புரிந்து கொண்ட அவர் அப்படியே மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    இதையும் படிங்க.. Canara Bank : மறுபடியும் உயர்ந்த வட்டி.. பிக்சட் டெபாசிட் முதலீடுக்கு இதுதான் சரியான நேரம்!

    எல்லா சீரியலை போலவும் இந்த சீரியலில் ஒரு வில்லி, ஒரு வில்லன் உள்ளனர். அது ரோஜாவின் மாமாவும், துரையின் மாமா மகளான ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் சேர்ந்து ரோஜா மற்றும் துரைக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை தருகின்றனர். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்த போது தான் பிக் பாஸ் சீசன் 5 காரணமாக சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. பிக் பாஸ் நிறைவடைந்த பின்பு தற்போது மீண்டும் இந்த சீரியல் பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

    கதைப்படி இவ்வளவு மாதங்களாக ரோஜா கோமாவில் இருந்தார். 2 நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு குழந்தை பிறந்தது. இப்படி இருக்கையில், அந்த குழந்தை ரோஜாவின் முன்னாள் காதலன் ராஜாவுக்கு பிறந்தது என்ற உண்மை ரோஜாவின் மாமாவுக்கு தெரிந்து விட்டது. உடனே அவர், குழந்தையை ரவுடிகள் மூலம் கடத்தி விடுகிறார். ஆஸ்பிட்டலில் இருக்கும் ரோஜாவுக்கு இந்த உண்மை தெரியாது.

    இதையும் படிங்க.. மாமியாருடன் சண்டை போட்ட சீரியல் நடிகை.. வெளியானது வீடியோ! கடைசியில் தான் ட்விஸ்டே இருக்கு

    ஆனால் மற்ற அனைவரும் குழந்தையை ஒருபக்கம் தேடி கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யாவுக்கும் யார் குழந்தையை திருடியது என்பது தெரியவில்லை. இப்படி இருக்கையில், சீரியலில் மிகப் பெரிய ட்விஸ்டாக ராஜாவின் அம்மாவிடம் ரோஜாவின் குழந்தை கிடைக்கிறது. ரவுடிகளிடம் இருந்து குழந்தையை காப்பாற்றி ராஜா அம்மா, தூக்கி செல்கிறார். இந்த ட்விஸ்டுடன் இன்றைய சீரியல் எபிசோடு முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி