சூப்பர் ஹிட் சீரியல்களை ரசிகர்களுக்கு வழங்குவதில் ஸ்டார் விஜய் டிவி முன்னணியில் இருக்கிறது. காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல்கள் விஜய் டிவி-யில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் செந்தூரப்பூவே. இந்த சீரியலில் துரைசிங்கம் என்ற கேரக்டரில் நடிகர் ரஞ்சித் நடித்து வருகிறார். ரோஜா என்ற கேரக்டரில் நடிகை ஸ்ரீநிதி நடித்து வருகிறார். திரைப்பட பெயர்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது போலவே இந்த சீரியலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 5 காரணமாக சுமார் 3 மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூரப்பூவே மீண்டும் ஒளிபரப்பாக துவங்கியதில் இருந்து விறுவிறுப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.
சூழ்நிலை காரணமாக ரோஜாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட துரை, அவர் ஏற்கனவே காதலன் மூலம் கர்ப்பமாக இருக்கும் உண்மை தெரிந்தும் மனைவியாக ஏற்று கொள்கிறார். இவர்கள் இருவருக்கும் குடைச்சல் கொடுக்கின்றார் ரோஜாவின் மாமாவும், துரையின் மாமா மகளும். சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் டெலிகாஸ்ட்டாக துவங்கிய போது ரோஜா கோமாவில் இருந்தது போல காட்டப்பட்டு சமீபத்தில் குழந்தை பிறந்தது போல கதை சென்று கொண்டிருக்கிறது. எதிர்பாராத திருப்பமாக ரோஜாவிற்கு பிறந்த குழந்தை துரைக்கு பிறந்தது இல்லை என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் அவளின் மாமா, குழந்தையை ரவுடிகள் மூலம் கடத்தி விடுகிறார். குழந்தை கடத்தப்பட்ட விஷயம் ரோஜாவிற்கு தெரிய வரும் போது அவர் என்ன செய்வார், குழந்தை மீட்கப்படுமா என்பதற்கான விடையாக செந்தூரப்பூவே சீரியலின் லேட்டஸ்ட் ப்ரமோ உள்ளது.
தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!
ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சியான புகைப்படம்!
சமீபத்திய ப்ரமோவில் கடத்தப்பட்ட குழந்தையை கொண்டு புதைக்க ரவுடிகள் குழி தோண்டும் நிலையில், அங்கு வரும் துரை என் குழந்தையவா டா கொன்னு புதைக்க பாக்குறீங்க என்று சொல்லி அவர்களை பந்தாடுகிறார். இதனிடையே குழந்தை கமநல போனது தெரிந்ததும் ரோஜா ஹாஸ்பிடல் மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய தயாராகிறார். கீழே நிற்கும் அவளது குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் சொல்வதை காதில் வாங்காமல் குதிக்க ரெடியாகும் போது துரை கொண்டு வந்த குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். வேகமாக கீழே ஓடிவந்து துரையின் கைகளில் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சும் ரோஜா, துரை காலடியில் குழந்தையை வைத்து மண்டியிட்டு கையெடுத்து கும்பிடுவதோடு ப்ரமோ முடிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.