எனக்கு அவரை தான் பிடிக்கும்... செந்தூரப்பூவே ரோஜாவிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்காத பதில்!

செந்தூரப்பூவே ரோஜா

25 வயது உடைய ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலை பற்றிச் சொல்லும் தொடர்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் நடிக்கும் நடிகை ஸ்ரீநிதி பற்றி பலரும் அறியாத தகவல்கள்.

  சின்னத்திரை நடிகைகள் பலரும் இன்று தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு எளிதில் பேரும் புகழும் அடைந்துவிடுகின்றனர். சின்னத்திரையில் இவர்களுக்கு இருக்கும் புகழையும் ரசிகர்களையும் பார்த்து வெள்ளித்திரையில் அவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன.அதிலும் விஜய் டிவி சீரியல் நடிகை என்றால் சந்தேகமே வேண்டாம் பெரிய நடிகர்கள் படத்திலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். அந்த வகையில் சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்தில் 21 வயதிலே நல்ல பெயரை வாங்கி விட்டார் ஸ்ரீநிதி. இப்போது சின்னத்திரையில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

  மலையாளத்து வரவான ஸ்ரீநிதி திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரில் முடித்தவர் சென்னையில் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். படித்துக்கொண்டே சினிமாவில் வாய்ப்பும் தேடி கொண்டிருந்தார். அப்போது தான் ’மலர்வாடி’ என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது ஒரு மலையாள சீரியல், இந்த தொடரில் இவரின் நடிப்பை பார்த்து அடுத்தடுத்த வாய்ப்புகள் அவரை தேடி சென்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழில் இவருக்கு முதல் சீரியல் சன் லைப்பில் ஒளிபரப்பான ஜிமிக்கி கம்மல். அதனை அடுத்து கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தறி சீரியல் மூலம் லீட் ரோலில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். தறியில் இவரின் நடிப்பைப் பார்த்த பிறகு, விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் ரோஜா டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.40 வயது உடைய ஒரு ஆணுக்கும் 25 வயது உடைய ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலை பற்றிச் சொல்லும் ஒரு ரொமான்டிக் டெலிவிஷன் தொடராக தொடங்கி இன்று ரோஜா கர்ப்பம், பேய் உதவுவது என சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. டி.ஆர்.பியிலும் நல்ல ரேட்டிங்கில் உள்ளது.

  இந்த சீரியலைத் தொடர்ந்து மலையாளத்திலும் ஸ்ரீநிதி ஒரு சில சீரியலில் கமிட் ஆகியுள்ளார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ரீல்ஸ் செய்து வெளியிடுவார். இவரிடம் அடிக்கடி ரசிகர்கள் நீங்கள் யார் ரசிகை ரசிகை என கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு ஸ்ரீநிதியின் பதில் தளபதி விஜய் தான். விஜய் என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்குமாம். பள்ளி, கல்லூரி காலங்களில் விஜய் படத்தை மிஸ் செய்யாமல் தியேட்டரில் சென்று பார்ப்பாராம். ஒரு படத்தையும் மிஸ் செய்ய மாட்டாராம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: