• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் விஷாலுக்கு டப்பிங் பேசியது நான் தான்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி நடிகை!

நடிகர் விஷாலுக்கு டப்பிங் பேசியது நான் தான்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி நடிகை!

விஜய் டிவி நடிகை

விஜய் டிவி நடிகை

செந்தில்குமாரி தான் அவன் இவன் படத்திற்கு விஷாலின் பெண் வேடத்துக்கு டப்பிங் பேசியுள்ளார்

  • Share this:
    நடிகர் விஷாலுக்கு டப்பிங் கொடுத்தது சின்னத்திரை நடிகை என்ற பதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விஷால் நன்றாகத் தமிழ் பேசுவாரே, அவருக்கு எதற்காக டப்பிங் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், விஷால் நடித்த ஒரு வெற்றிப்படமான, பரவலாக பாராட்டப்பட்ட ஒரு திரைப்படத்தில், அவருக்காக ஒரு சீரியல் நடிகை டப்பிங் செய்துள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

    நடிகர் விஷாலின் பெண் கதாப்பாத்திரம், உடல் மொழி‌ மட்டுமன்றி அவரின் குரலும் பெரிதும் பாராட்டப்பட்டத் திரைப்படம், இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்திற்கு டப்பிங் பேசியது நடிகர் விஷால் அல்ல. நடிகர் விஷாலுக்காக அவன் இவன் திரைபடத்தில் டப்பிங் பேசியது யார் என்று தெரியுமா? அவர் ஒரு பிரபலமான சின்னத்திரை நடிகை.

    இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் என்றாலே வித்தியாசமான கதாபாத்திரங்கள் தான் நம் கண்முன்னே தோன்றும். அதில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம் அவன் இவன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் பெண் வேடமிட்டு நடித்தது ஆகும்.

    பல நடிகர்களும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டுள்ளனர். படத்துக்கு, கதைக்கு, பாத்திரத்துக்கு ஏற்றது போல தன்னுடைய நாயகனை உருமாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவர் இயக்குனர் பாலா. அழகான, சாக்லேட் பாய் தோற்றம் கொண்ட ஆர்யா, அதர்வா உள்ளிட்ட பல கதாநாயகர்களை தன்னுடைய கதைக்கும் பாத்திரத்திற்கும் ஏற்றவாறு உருமாற்றி வெற்றிப் படங்களை அளித்தவர் இயக்குனர் பாலா.

     

    பாரதி கண்ணம்மா செந்தில் குமாரி


    இவரின் நாயகர்களில் பெண் வேடமிட்டு, மெனக்கெட்டு தன்னுடைய பாத்திரத்தை நிறைவாக செய்தவர் நடிகர் விஷால். பெண் வேடத்தில் இந்த படத்திற்காக விஷால் தன்னுடைய கண்ணின் கருவிழியை நடுப்புறத்தில் நிறுத்தி வைத்து நடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். இதனை பல பேட்டிகளில் நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். ஆனால், பலருக்கும் தெரியாத ஒன்று, அவன் இவன் படத்தில் பெண் வேடத்திற்கான டப்பிங் பேசியது நடிகர் விஷால் இல்லை என்பது. அதுவும், இந்த செய்தி சமீபத்தில் தான் வெளியானது.

    இது பலருக்கும் ஆச்சரியத்தையும் கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்போது பெண் வேடத்திற்கு டப்பிங் கொடுத்தது யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும்பியுள்ளது. அவன் இவன் திரைப்படத்தில் பெண் குரலில் பேசியவர், ஒரு பிரபலமான சின்னத்திரை சீரியல் நடிகை. சின்னத்திரை நடிகைகளுக்கே டப்பிங் கலைஞர்கள் தான் டப்பிங் பேசுகிறார்கள் என்ற நிலையில், சின்னத்திரை நடிகை ஒருவர் நடிகருக்கு டப்பிங் பேசியது பாராட்டுக்குரியது.

    தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மாவின் சித்தியாக நடித்து வரும் செந்தில்குமாரி தான் அவன் இவன் படத்திற்கு விஷாலின் பெண் வேடத்துக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. ஒரு பேட்டியில் நடிகை செந்தில்குமாரி, விஷாலுக்காக டப்பிங் கொடுத்துள்ளேன் என்று கூறினார். அதையடுத்து, அவன் இவன் திரைப்படத்துக்காக, விஷால் நடித்த பெண் வேடப் பகுதிகளுக்கு டப்பிங் அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: