சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு உலகம் பேசும் கலைஞர்களாக மாறியுள்ள செந்தில் - ராஜலட்சுமி தம்பதியினரின் விளம்பரம் இணையத்தில் படு வைரல் தெரியுமா?
ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல ஹிட் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் ஷோவும் ஒன்று. தமிழகத்தில் சூப்பர் சிங்கர் ஷோவை பார்க்காத அல்லது கேள்விப்படாத சின்னத்திரை ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலகளவில் தமிழர்கள் மத்தியில் மிக பிரபலமான ஷோவாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர். இது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரையும் கவர்ந்த ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது.
STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதுவரை பல வெற்றி மேடைகளை கண்டு இருக்கிறது. அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் இன்று வெள்ளித்திரையில் பாடகர்களாக கலக்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு . தனது முழு திறமையை வெளிப்படுத்திய கிராமிய பாடகரான செந்தில் கணேஷ் இறுதியில் சூப்பர் சிங்கர் டைட்டிலை தட்டி சென்றது அனைவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். இதே சீசனில் செந்திலின் மனைவியும், கிராமிய பாடகருமான ராஜலட்சுமியும் பங்கேற்றாலும் இறுதி வரை சென்று வெற்றி பெற்றார் செந்தில்.
கோபிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி… பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா?
இந்த ஜோடி சூப்பர் சிங்கரில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆன பின்னர் அடுத்த கட்டத்திற்கு சென்றனர். வெள்ளிதிரையில் சில படங்களில் இருவரும் பாடி உள்ளார்கள். "சின்ன மச்சான்" , "அய்யா சாமி" பாடல்கள் பட்டி தொட்டில் எங்கும் படு வைரல். இதனை தொடர்ந்து கணவன் - மனைவி இருவருமே ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளனர்.
தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றனர். இதில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோ செந்தில் - ராஜலட்சுமி ஜோடிகளை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. சென்னை குல்பி என்ற விளம்பரத்தில் இருவரும் நடித்துள்ளனர். பாடுவது மட்டுமிலை நடனம், ஆக்டிங் என இந்த விளம்பரத்தில் செந்தில் - ராஜலட்சுமி முழு திறமையும் காட்டி கைத்தட்டல்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். இந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.