ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அண்ணாந்து பார்க்க வைக்கும் வளர்ச்சி.. வெளிநாட்டில் செந்தில் - ராஜலட்சுமி ஜோடி!

அண்ணாந்து பார்க்க வைக்கும் வளர்ச்சி.. வெளிநாட்டில் செந்தில் - ராஜலட்சுமி ஜோடி!

செந்தில் - ராஜ;லட்சுமி

செந்தில் - ராஜ;லட்சுமி

ஊருக்கு ஏற்றார் போல் இருவரும் செம்ம மாடர்னாக காட்சி அளிக்கின்றனர். செந்தில் - ராஜலட்சுமி புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடி வெளிநாடு பயணமாக ஸ்விட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் செந்தில் - ராஜலட்சுமி இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.

  உலகளவில் தமிழர்கள் மத்தியில் மிக பிரபலமான ஷோவாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர்.  இந்த  நிகழ்ச்சி இதுவரை பல வெற்றி மேடைகளை கண்டு இருக்கிறது. அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் இன்று வெள்ளித்திரையில் பாடகர்களாக கலக்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு . தனது முழு திறமையை வெளிப்படுத்திய கிராமிய பாடகரான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். அந்த சீசனின் வெற்றியாளரும் செந்தில் தான்.

  இந்த வயசில் எனக்கு 23 வயது பெண்ணுடன் திருமணமா? உண்மையை உடைத்த பப்லு பிரித்விராஜ்!

  கிராமிய நாட்டுப்புற பாடகர்களான இவர்களின் பயணம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்பு அடுத்தக்கட்டத்திற்கு சென்ரது.வெள்ளிதிரையில் சில படங்களில் இருவரும் பாடி உள்ளார்கள். "சின்ன மச்சான்" , "அய்யா சாமி" பாடல்கள் பட்டி தொட்டில் எங்கும் படு வைரல். இதனை தொடர்ந்து கணவன் - மனைவி இருவருமே ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளனர். சமீபத்தில் புதுக்கோட்டையில் இவர்கள் கட்டிய பிரம்மாண்ட வீட்டின் புதுமனை புகுவிழா நடைப்பெற்றது. அதில் அரசியல் பிரபலங்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள், கிராமிய இசை பாடக்ரள் சங்கத்தின் என பலரும் கலந்துக் கொண்டனர்.


  இந்நிலையில் தற்போது செந்தில் - ராஜலட்சுமி இருவரும் இசை கச்சேரியில் கலந்து கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். பனி பிரதேசமான ஸ்விட்சர்லாந்து மண்ணில் இருவரும் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். அதை இன்ஸ்டாவில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளனர். ஊருக்கு ஏற்றார் போல் இருவரும் செம்ம மாடர்னாக காட்சி அளிக்கின்றனர்.


  செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் இந்த புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் லைக்ஸ் குவிந்து வருகின்றன. சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து இன்று தமிழ் இசை கிராமிய பாடல்களை உலகெங்கும் கொண்டு செல்லும் இவர்களின் பயணத்துக்கு பலரும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்,.

  அதுமட்டுமில்லை ஸ்விட்சர்லாந்தில் இருவரும் செய்த இன்ஸ்டா ரிலீஸ் வீடியோவை இன்ஸ்டாவில் ராஜலட்சுமி ஷெர் செய்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Vijay tv, Viral