• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் டிவி-யின் அன்பே வா சீரியலில் விரைவில் தோன்ற போகும் பிரபல மூத்த நடிகை!

சன் டிவி-யின் அன்பே வா சீரியலில் விரைவில் தோன்ற போகும் பிரபல மூத்த நடிகை!

அன்பே வா

அன்பே வா

அப்பா இல்லாமல் தாய் அன்னலட்சுமியின் மற்றும் கார்த்திகா, தீபிகா ஆகிய இரு சகோதசரிகளுடன் வாழும் பூமிகா, பணக்கார குடும்பத்தை சேர்ந்த கலகலப்பான வருண் இருவருக்குள்ளும் ஏற்படும் மோதல், காதல், திருமணம் மற்றும் அதனை தொடர்ந்து எழும் குடும்ப சிக்கல்களை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

  • Share this:
தமிழ் டிவி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிரபல முன்னணி சேனலான சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தமிழகம் மட்டுமல்ல உலக அளவில் வசிக்கும் தமிழ் மக்கள் ரசிகர்களாக உள்ளனர். தற்போது பல தமிழ் சேனல்கள் அறிமுகமாகி நாள்தோறும் சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் சன் டிவி சீரியல்களுக்கென்று இருக்கும் மவுசு குறையவில்லை. மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகி வரும் பல சன் டிவி சீரியல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. இதில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது அன்பே வா சீரியல்.

கடந்த 2020 நவம்பர் 2-ம் தேதி முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது அன்பே வா. ரதி பாலா வசனத்தில், ராஜாஷ்ரி என் ராய் திரைக்கதையில், சிவா எம்பி இயக்கத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அன்பே வா சீரியல் பல திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்புகளுடன் கூடிய கதைக்களத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் நடிகை டெல்னா டேவிஸ், பூமிகா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வருண் என்ற கேரக்டரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விராட் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பா இல்லாமல் தாய் அன்னலட்சுமியின் மற்றும் கார்த்திகா, தீபிகா ஆகிய இரு சகோதசரிகளுடன் வாழும் பூமிகா, பணக்கார குடும்பத்தை சேர்ந்த கலகலப்பான வருண் இருவருக்குள்ளும் ஏற்படும் மோதல், காதல், திருமணம் மற்றும் அதனை தொடர்ந்து எழும் குடும்ப சிக்கல்களை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே வெள்ளித்திரையில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பலர் சமீப ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து தமிழ் டிவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாகவும், ரசிகர்களின் கனவு கன்னிகளாகவும் வலம் வந்த ராதிகா, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, தேவயானி, கவுசல்யா, நளினி என பட்டியல் நீளும். இதில் 80’ஸ் திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என உச்ச நட்சத்திரங்கள் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட முக்கிய நடிகை அம்பிகா. இவரும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கி பல ஆண்டுகள் ஆகிறது. அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சின்னத்திரையில் தான் இவரை அதிகம் பார்க்க முடிகிறது.

Also read... ஹேமா யாருன்னு கண்ணம்மாவுக்கு தெரிஞ்சிருச்சா? பாரதி கண்ணம்மாவில் அடுத்த டிவிஸ்ட்!

ஏற்கனவே சன் டிவி-யில் நாயகி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற நடிகை அம்பிகா, தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் இனிய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை அம்பிகா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்டலர் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் நிலையில், அன்பே வா சீரியல் நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை அம்பிகா எடுத்து கொண்ட போட்டோ சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் நல்ல அனுபவம் வாய்ந்த, மூத்த நடிகையான அம்பிகா இணையும் தகவல் சன் டிவி மற்றும் அன்பே வா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: