ஜீ தமிழ் சேனலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு சீரியலாக அவர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1300-க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிகை ப்ரியா ராமன், அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். சின்னத்திரையில் மிகப் பெரிய வெற்றிக்கண்ட இந்த சீரியல் தற்போது புது ரூட்டில் சென்று கொண்டிருக்கிறது. இது ரசிகர்களின் பொறுமையை யோசிப்பதாக பல விமர்ச்னங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?
செம்பருத்தி சீரியலுக்கு என்று தனி
ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆதி - பார்வதி திருமண எபிசோடுகளை 2 நாட்கள் காத்திருந்து பார்த்த கூட்டமும் இங்கு உண்டு. இப்படி இருக்கையில், இதற்கு முன்பு ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் சில எதிர்பாராத காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆதியாக கார்த்திக் தான் நடிக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. . ஆரம்பத்தில் பார்வதி, ஆதியின் காதல் ரொமான்ஸ் பார்த்து குதூகலமான ரசிகர்கள் இந்த சீரியலை கொண்டாடினார்கள். இந்நிலையில் கார்த்திக் விலகிய பிறகு ரசிகர்கள் பட்டாளம் குறைந்து விடுமோ என எண்ணிய டீமுக்கு உயிர் கொடுப்பது போல அக்னி அந்த இடத்தை வெகு விரைவில் பிடித்தார்.அவரின் நடிப்பும் சீரியலுக்கு உயிர் கொடுக்க ,மீண்டும் செம்பருத்தி சீரியல் டி.ஆர்.பியில் கலக்க தொடங்கியது.
இதையும் படிங்க.. அந்த வார்த்தை சொன்ன தாமரை.. கடுப்பானாரா ஆங்கர் பிரியங்கா? கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!
இதுவரை
பார்வதிக்கு ஆதி 3 முறை தாலி கட்டி விட்டார், அகிலாண்டேஸ்வரியும் ஆதி - பார்வதியை ஏற்றுக் கொண்டார். இப்படி க்ளைமேக்ஸை நோக்கி சீரியல் விறுவிறுப்பாக சென்றதை பார்த்ததும், ரசிகர்கள் சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக நினைத்தனர். அதே போல் இணையத்தில் செம்பருத்தி சீரியல் முடிய போவதாக தகவல்கள் பரவின. ஆனால் கடைசியில் அது போல் எதுவும் நடக்கவில்லை.
இப்போது சீரியல் டிராக், புது கோணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. புவனேஸ்வரி குடும்பம், அவர்கள் குறித்த கதை, என திரைக்கதை பயணிப்பதை ரசிகர்கள் விருப்பவில்லை. இந்த சீரியலில் புதியதாக சீரியல் நடிகை யமுனா, ப்ரீத்தா, நடிகர் விஷ்ணு ஆகியோரும் இணையவுள்ளனர். இதுக் குறித்த அப்டேட் போஸ்டிலும் ரசிகர்கள் தங்களது மன குமுறலை கொட்டி தீர்த்துள்ளனர். சீரியல் கூடிய வரைவில் முடிந்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.