ஜீ தமிழ் சேனலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு சீரியலாக அவர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1200-க்கும் ஏற்பட்ட எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிகை ப்ரியா ராமன், அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு ஆதி கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். இவர் சில எதிர்பாராத காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். ஆதி, பார்வதி காம்போ தான் ரசிகர்களிடையே இந்த சீரியல் பிரபலமாக காரணமானது. ஆரம்பத்தில் பார்வதி, ஆதியின் காதல் ரொமான்ஸ் பார்த்து குதூகலமான ரசிகர்கள் இந்த சீரியலை கொண்டாடினார்கள். இந்நிலையில் கார்த்திக் விலகிய பிறகு ரசிகர்கள் பட்டாளம் குறைந்து விடுமோ என எண்ணிய டீமுக்கு உயிர் கொடுப்பது போல அக்னி அந்த இடத்தை வெகு விரைவில் பிடித்தார்.
இதையும் படிங்க.. டாக்டர் பாரதி ஒரு சகுனியாம்.. சொன்னது யாரு கண்ணம்மா தான்!
இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் நடிகை
ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் வனஜா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை லட்சுமி. இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ளார். வில்லியாக இருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். செம்பருத்தி சீரியலில் வனஜாவாக நடிக்கும் லக்ஷிமியின் பேசும் தோரணையும், அவரின் அசத்தலான நடிப்பையும் பலர் ரசித்து வருகின்றனர்.
மேலும், இவர் தனது பிட்னஸ் பற்றி தனது சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அவ்வப்போது சில
டிப்ஸ்களை கொடுத்து வருவார். அதேபோல, சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் ரீலிஸ் வீடியோவை பதிவிட்டு வருவார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போது தான் தெரியவந்தது இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறார் என்று.
இதையும் படிங்க.. ஐஸ்வர்யா சொன்ன ஒரே ஒரு வார்த்தை... தேம்பி தேம்பி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!
சமீபத்தில் தனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி,மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இவர் பகிர்ந்து இருந்தார். அதில் அவரது மகன் லட்சுமியின் தோலுக்கு மேல் வளர்ந்து ஹீரோ போல காட்சியளித்தார். இந்த புகைப்படத்தைப் பார்த்த பலர் , அட உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? நம்பவே முடியலையே! என கேட்டு வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.