ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு சீரியலாக அவர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் 'செம்பருத்தி'. இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் நடிகை ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார்.
இவருடைய காதல் விவகாரம் குறித்து ஏற்கனவே, பல தகவல்கள் கசிந்த நிலையில், நிலையில் அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகரை காதலிப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் திடீரென கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் பரவி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஷபானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு அரை மனதோடு ஆர்யன் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டாலும் , ஷபானா வீட்டில் தொடர்ந்து திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோரை மீறி ஷபானா ஆர்யனை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் நண்பர்கள் உதவியோடு மிகவும் எளிமையாகவே நடந்தது.
தற்போது ஆர்யன் குடும்பத்தில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக சில வதந்திகள் பரவி வருகின்றன. எனவே இருவரும் திருமணம் ஆன ஒரே மாதத்தில் விவாகரத்து பெரும் முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவ துவங்கியுள்ளது.
விஜய் டிவி நந்தினி காட்டில் அடை மழை.. பிரபல நடிகர் படத்தில் கமிட்!
அதே நேரத்தில், ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்றும் பதிவு செய்திருந்தது ரசிகர்களை மேலும் குழப்பம் அடைய செய்திருந்தது. இவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவரை இன்ஸ்டாவில் சுமார் ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். மேலும் இந்த வதந்தி குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
காசு இருக்குன்னு இப்படியா? சம்யுக்தாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
இதனிடையே தற்போது ஷபானா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவதுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள் பல கருத்துக்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்தில் அவர் புடவையில் வெட்கப்பட்டு நிற்பதைக் காணலாம்.
View this post on Instagram
அதில், அவர் பதிவிட்டிருந்ததாவது, "ஒரு சிறு புன்னகை☺️, கொஞ்சம் சந்தோஷம்😍, ஒரு சிறிய நிலவு, கனவுகளின் ஓலைகளுடன், ஒரு வீட்டை உருவாக்குவோம்" என்ற தத்துவத்தை எழுதியுள்ளார். பலர், இப்படி ஒரு தத்துவத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sembaruthi Serial, TV Serial, Zee tamil