Home /News /entertainment /

என்ன ஷபானா இதெல்லாம்? சீரியல் முடிந்த கையோடு ஆளே மாறிப்போன நடிகை!

என்ன ஷபானா இதெல்லாம்? சீரியல் முடிந்த கையோடு ஆளே மாறிப்போன நடிகை!

செம்பருத்தி ஷபானா

செம்பருத்தி ஷபானா

இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் ? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    செம்பருத்தி புகழ் ஷபானாவின் புதிய லுக் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

    ரசிகர்களை பெரிதும் கவர்ந்த  சீரியலாக அவர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த செம்பருத்தி சீரியல் சில நாட்களுக்கு முன்பு  பிரம்மாண்டமான  வெற்றி கொண்டாட்டத்துடன் முடிவடைந்தது. இந்த சீரியலில் நடித்தன் மூலம் நடிகை ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் பிறந்தது கேரளா என்றாலும் படித்தது வளர்ந்தது எல்லாமே மும்பை தான்.தமிழில் ஷபானா நடித்த முதல் சீரியலே அவருக்கு மிகப் பெரிய பெயரை  வாங்கி தந்து விட்டது. தமிழ் குடும்பங்களில் பார்வதியாகவே ஷபானா வாழ்கிறார்.



    லவ்வோ லவ்வு.. சினேகன் - கன்னிகாவின் சிம்பிளான திருமண நாள் கொண்டாட்டம்!

    ஷபானா ஆர்யன் விவகாரம் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் இருவரும் முறைப்படி திருமணமும் செய்து கொண்டனர். இருவருமே சின்னத்திரை பிரபலங்கள் என்பதால் தங்களது கெரியரில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். ஆர்யன் தற்போது மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். ஷபானா நடித்து வந்த வெற்றி தொடர் செம்பருத்தி  சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் ஷபானா வேற சிரீயலில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி ஆங்கர் தியா.. குவியும் வாழ்த்துக்கள்!

    இந்நிலையில் ஷபானா திடீரென்று நியூ லுக்குக்கு மாறியுள்ளார். முடியை கட் செய்து செம்ம ஸ்டைலாக காட்சியளிக்கும் ஷபானா இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார். ஆனால் அவர் நினைத்தது போல் இல்லை, இந்த புதிய தோற்றத்திற்கு நெகட்டிவ், பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.




    பலரும் இந்த கெட்டப் ஷபானாவுக்கு செட் ஆகவில்லை என கூறுகின்றனர். இன்னும் சிலர் அவர் சூப்பராக இருப்பதாக கூறுகின்றனர். அதே போல் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் ? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sembaruthi Serial, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி