செம்பருத்தி ஷபானா - ஆர்யன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. இனி இருவரும் ஒரே சேனலில் தங்களது பயணத்தை தொடர போகிறார்கள்.
சின்னத்திரையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சீரியலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் 'செம்பருத்தி'. இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் நடிகை ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யனை கரம் பிடித்தார். நடிகை ஷபானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு ஷபானா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோரை மீறி ஷபானா ஆர்யனை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் நண்பர்கள் உதவியோடு மிகவும் எளிமையாகவே நடந்தது.
பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தாமரை!
திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது சினிமா கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஷபானா தொடர்ந்து செம்பருத்தி சிரியலில் நடித்து வரும் நிலையில் ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார். பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஆர்யன் திடீரென்று அதிலிருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. அப்போது தான் ஆர்யன் லீட் ரோலில் வேற சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் விசேஷம்.. திரண்டு சென்ற சின்னத்திரை பிரபலங்கள்!
இந்நிலையில் இப்போது இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆர்யன் லீட் ரோலில் நடிக்கவிருக்கும் புத்தம் புதிய சீரியல் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இதில் ஆர்யன் லீட் ரோலில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மோக்ஷிதா நடிக்கிறார். பிரபல தெலுங்கு சீரியலான ’ரத்தமா குத்துரு’ சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த தொடர். தெலுங்கில் பயங்கர ஹிட்டடித்த இந்த சீரியல் அம்மா- மகள் சென்டிமெண்ட்டை அடிப்படையாக கொண்டது.
இந்த தொடரின் தமிழ் ரீமேக் ஜீ தமிழில் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதுமட்டுமில்லை இந்த தொடரில் பிரபல நடிகை அர்ச்சனாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர நாம் இருவர் நமக்கு இருவர் காயத்ரி, பிரணிக்கா, சுபத்ரா ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஏற்கனவே ஷபானா செம்பருத்தி சீரியலில் நடிக்க, இப்போது ஆர்யனும் ஜீ தமிழ் பக்கம் வந்து விட்டார். இனிமேல் இருவரின் சீரியலும் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.