Home /News /entertainment /

செம்பருத்தி ஷபானாவுக்கு அடுத்த சீரியலில் இவர் தான் ஜோடி!

செம்பருத்தி ஷபானாவுக்கு அடுத்த சீரியலில் இவர் தான் ஜோடி!

செம்பருத்தி ஷபானா

செம்பருத்தி ஷபானா

இந்த சீரியலுக்காக மொத்த சின்னத்திரை ரசிகர்களும் வெயிட்டிங்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    செம்பருத்தி ஷபானா சன் டிவியில் நடிக்கும் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகர் யார்? என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

    ரசிகர்களை பெரிதும் கவர்ந்து 1000 எபிசோடுகளை தாண்டி மிகப் பெரிய வெற்றியுடன் நிறைவடைந்தது ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல். இதில் லீட் ரோலில் நடித்த நடிகை ஷபானா தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர். முதல் சீரியலே ஷபானாவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி தந்துள்ளது.செம்பருத்தி சீரியல் மூலம் ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் உடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அவரின் கணவர் ஆர்யனும் தற்போது  மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு எல்லா படத்திலும் இதுதான் பண்றாரு.. புலம்பிய விஜய் டிவி பிரபலம்!

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செம்பருத்தி சீரியல் முடிவடைந்தது. அடுத்து ஷபானா எந்த சீரியலில் நடிப்பார்? என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் அவர் சன் டிவியில் புதிய சீரியலில் நடிக்க இருப்பது உறுதியானது. இதுக் குறித்த தகவலும் இணையத்தில் பரவின. ஆனால் சீரியல் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் ஷபானா நடிக்கும் சீரியலில் அவருக்கு ஜோடியாக லீட் ரோலில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் இணையத்தில்  கசிந்துள்ளது.

    கமலுக்குப் பிடித்தமான மம்முட்டியின் அறிமுகப்படம்!

    கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல் உலகில் மிகப் பெரிய ஃபேன்ஸ் ஃபாலோவை கொண்டிருக்கும் நடிகர் பவன் ரவீந்திரா ஷபானாவுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீரியல் சன் டிவியில் பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் ஆகவுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    அதுமட்டுமில்லை இந்த சீரியலை சின்னத்திரை இயக்குனர் சுலைமான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் காஸ்ட் இணைந்துள்ள இந்த சீரியலுக்காக மொத்த சின்னத்திரை ரசிகர்களும் வெயிட்டிங். அடுத்த வாரத்தில் சீரியல் டைட்டில் குறித்த தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி