Home /News /entertainment /

ஒரு வழியா செம்பருத்தி சீரியலில் அது நடந்துடுச்சு! - மகிழ்ச்சியில் ஆதி

ஒரு வழியா செம்பருத்தி சீரியலில் அது நடந்துடுச்சு! - மகிழ்ச்சியில் ஆதி

செம்பருத்தி

செம்பருத்தி

அப்செட்டான ஆதி தன் தம்பி அருணிடம் ஒரு உண்மையை சொல்கிறார். அதாவது அகிலாண்டேஸ்வரி ஆதி பார்வதியை ஏற்றுக் கொள்ளும்வரை முதலிரவு வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தனராம்.  ``சீரியல் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா’’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் பேசுவது மீண்டும் கேட்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    செம்பருத்தி சீரியலில் மூன்றாவது முறையாக பார்வதியின் கழுத்தில் ஆதி தாலி கட்டியிருக்கிறார். `சீரியல் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் பேசுவது கேட்கிறது. 

    சீரியல் ஆரம்பத்தில் அகிலாண்டேஸ்வரி நடத்தும் கம்பெனியின் விளம்பரத்துக்காக ஆதி பார்வதி கழுத்தில் தாலி கட்டுவார். அதன் பிறகு இருவருக்கும் காதல் மலரும். பார்வதி வேலைக்கார பெண் என்பதால் அகிலாண்டேஸ்வரிக்கு பயந்து ஆதியும் பார்வதியும் திருமணம் செய்து கொள்வார்கள்.

    தாலியை மறைத்து கொண்டு பார்வதி அகிலா வீட்டில் வேலை செய்வார். அதன் பிறகு பல டிவிஸ்டுகள், ஆள் மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து இப்போது ஆதி-பார்வதிக்கு அகிலாண்டேஸ்வரியே திருமணம் நடத்தி வைக்கிறார்.  

    ஆதியாக மக்கள் மனதில் பதிந்த கார்த்திக் ராஜ் திடீரென சீரியல் விட்டு விலகினார். அதன் பிறகு செம்பருத்தி சீரியலின் டி ஆர் பி ரேட்டிங் பயங்கரமாக அடி வாங்கியது. ட்ரெண்டிங்கில் இருந்த செம்பருத்தி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

    இதையும் படிங்க.. 90ஸ் கிட்ஸுக்கு ஒரு சீக்ரெட்! - டாப் 10 சுரேஷ் பகிர்வு

    ஆதியாக சின்னத்திரையில் களமிறங்கிய தொகுப்பாளர் அக்னி தன் நடிப்பு திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் செம்பருத்தி மீண்டும் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு செம்பருத்தி ப்ரோமோ ஒன்று யூ டியூப் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது. மற்றொரு புறம் செம்பருத்தி சீரியல் முடியப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. 

    Sembaruthi today episode

    செம்பருத்தி சீரியலில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆதி- பார்வதி திருமண எபிசோடை மிகுந்த ஹைப் கொடுத்து  இரண்டரை மணி நேர நிகழ்வாக ஒளிபரப்பினர். அந்த எபிசோட் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

    sembaruthi
    செம்பருத்தி


    இரண்டு வருடங்களாக  கதையில் பல திருப்பங்கள் நடந்து முடிந்து ஒருவழியாக ஆதி - பார்வதி காதலை அகிலா ஏற்றுக் கொண்டு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கிறார். இந்த காட்சி தொடர்பான புரோமோ தான் யூ டியூபில் டிரெண்டாகி உள்ளது.



     நேற்றைய எபிசோடில் ஆதி, பார்வதியின் கழுத்தில் மூன்றாவது முறையாக தாலி கட்டினார். இன்றைய எபிசோடில் பார்வதி அகிலாவிடம் தன் பிறப்பு ரகசியத்தை சொல்ல முற்படுகிறார். ஆனால் அங்குதான் ஒரு சின்ன டிவிஸ்ட். அகிலாவுக்கு பார்வதி பற்றிய உண்மை தெரிய வந்ததா இல்லையா என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

     இன்றைய எபிசோட்டின் இன்னொரு ஹைலைட் ஆதி-பார்வதியின் ஃபர்ஸ்ட் நைட் சீக்வன்ஸ். செம்பருத்தி சீரியலில் ஆஸ்தான பாட்டிகள் ஆதி-பார்வதிக்கு முதலிரவு வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள். அதற்கு அருண் `அட பாட்டி அவங்களுக்கு மூணாவது தடவை கல்யாணம் ஆகுது, இப்போ ஏன் ஃபஸ்ர்ட் நைட்டு’ என்று ஓப்பனாக கலாய்த்து விடுகிறார்.

    செம்பருத்தி


    அப்செட்டான ஆதி தன் தம்பி அருணிடம் ஒரு உண்மையை சொல்கிறார். அதாவது அகிலாண்டேஸ்வரி ஆதி பார்வதியை ஏற்றுக் கொள்ளும்வரை முதலிரவு வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தனராம்.  ``சீரியல் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா’’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் பேசுவது மீண்டும் கேட்கிறது.

    இன்று முதலிரவு சீக்வன்ஸ் வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது. வழக்கம் போல் வனஜா வில்லத்தனம் செய்து அதனை தடுத்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Aswini S
    First published:

    Tags: Sembaruthi Serial, TV Serial, TV Serial Promos, Zee Tamil Tv

    அடுத்த செய்தி