செம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம்

செம்பருத்தி தொடர் இயக்குநர் ரவி பாண்டியனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

செம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம்
செம்பருத்தி சீரியல்
  • Share this:
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 1-ம் தேதி முதல் 60 பேருடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.

மீண்டும் ஜூன் 19-ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஆரம்பித்த முதல்நாளிலேயே அத்தொடரின் இயக்குநர் ரவி பாண்டியனுக்கு பிறந்தநாள் என்பதால் செம்பருத்தி சீரியல் குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.


கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன் உள்ளிட்டோர் நடித்து வரும் செம்பருத்தி சீரியலின் புதிய எபிசோட்கள் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஊரடங்கால் படப்பிடிப்பின்றி தவித்து வந்த சின்னத்திரை நடிகர்கள் தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சியடைந்திருப்பதாக சின்னத்திரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading