ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்... காதலருடன் சீரியல் நடிகை இருக்கும் புகைப்படம் ரிலீஸ்!

செம்பருத்தி பார்வதி

ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் செழியன்

  • Share this:
    தமிழ் சின்னத்திரை ரசிகர்களை பெரிது கவர்ந்துள்ள சீரியல்களில் ஒன்று ஜீ தமிழில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல்.

    1150 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் மூத்த நடிகை ப்ரியா ராமன், ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற கம்பீர கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் மூலம் ஹீரோயின் ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து உள்ளார்.

    விறுவிறுப்பான கதையம்சம் மற்றும் நடிகை ஷாபனாவின் நடிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் காரணமாக இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சிறந்த 5 சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி இருந்து வருவது இதற்கு சாட்சி. கிராமத்தில் இருந்து வந்து பணக்கார வீடு ஒன்றில் பணி பெண்ணாக சேர்ந்து பின் அந்த வீட்டிற்கே மருமகளாக ஆகும் ஒரு பெண் மற்றும் அவளை சுற்றி நடக்கும் திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகளை மையமாக கொண்ட இந்த சீரியலில் பணிப்பெண் மற்றும் மருமகள் என 2 விதமான நடிப்பை திறம்பட வெளிப்படுத்திய ஷபானா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

    இதனிடையே ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஆர்யனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யன் இருவருமே இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். தங்களை பற்றிய கிசுகிசுக்களை உறுதி செய்யும் வகையில் இருவரும் அவ்வப்போது போஸ்ட்களை ஷேர் செய்வர். என்றாலும் கூட இருவரும் தங்களது காதல் குறித்து இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சில மாதங்களுக்கு முன் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாவில் பதிலளித்த நடிகர் ஆர்யன், நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா என்று கேட்ட ரசிகைக்கு, நடிகை ஷபானாவை டேக் செய்து இவங்களுக்கு என்ன சொல்லட்டும்..? என்று கேள்வி கேட்ட ரசிகையிடமே பதில் கேள்வி எழுப்பினார். இதை தனது இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்த நடிகை ஷபானா, "மைன்"(என்னுடையவர்) என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு இவர்களின் சூசகமான சில செயல்பாடுகள் மூலம் தான் இருவருக்குள்ளும் காதல் இருக்கிறது என்று ரசிகர்களும், நாமும் புரிந்து கொள்ள முடிகிறது.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    _its_shaboo இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_its_shaboo)






    காதலிப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை இருவரும் சேர்ந்து இருக்கும் எந்த ஒரு ஃபோட்டோவும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது முதல் முறை இருவரும் சேர்ந்து நின்று எடுத்து கொண்ட ஃபோட்டோ ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    _its_shaboo இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_its_shaboo)






    _its_shaboo என்ற ஷபானாவின் ஃபேன் பேஜில் ஷேர் செய்யப்பட்டுள்ள ஃபோட்டோக்கள் சீரியல் நடிகர் மதனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்முறை இருவரையும் ஒருசேர ஃபோட்டோவில் பார்த்த அவர்களது ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வாழ்த்தி கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: