முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இயக்குநர் பாலா போட்ட கட்டளை... ஏற்க மறுத்த செம்பருத்தி சீரியல் நடிகை!

இயக்குநர் பாலா போட்ட கட்டளை... ஏற்க மறுத்த செம்பருத்தி சீரியல் நடிகை!

இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா

இயக்குநர் பாலாவின் சூப்பர் ஹிட் திரைப்படமான சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் பிரபல சீரியல் நடிகை ஷில்பா.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குநர் பாலா போட்ட ஸ்ட்ராங் கண்டிஷனால், அவரின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்திருக்கிறார் பிரபல சீரியல் நடிகை ஒருவர்.

சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படம், தேசிய விருது, தமிழக அரசின் மாநில விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றது. இதையடுத்து சூர்யாவுடன் நந்தா, ஆர்யாவுடன் நான் கடவுள், விஷாலுடன் அவன் இவன், அதர்வாவுடன் பரதேசி என பாலாவின் படங்கள் அனைத்துமே அந்ததந்த நடிகர்களின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படங்களான அமைந்தன.

பாலாவின் படங்கள் என்றாலே விமர்சன ரீதியாக கூர்ந்து கவனிக்கப்படும். அதில் நடிக்கும் நடிகர் / நடிகைகள் தங்களது முழு உழைப்பையும் கொடுக்க வேண்டியிருக்கும். அவர் தன் படத்திற்காக எடுத்துக் கொள்ளும் கதையோ, கதாபாத்திரங்களோ லேசாக இருக்காது. பாலா படத்தில் வேலை செய்தால், யாரிடமும் வேலை செய்து விடலாம் என்ற எண்ணமும் இளம் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இல்லாமல் இல்லை.

இந்நிலையில் இயக்குநர் பாலாவின் சூப்பர் ஹிட் திரைப்படமான சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் பிரபல சீரியல் நடிகை ஷில்பா. தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்த ஷில்பா, பின்னர் சீரியல் நடிகையாகி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

Actress Shilpa missed Director Bala and Vikram Sethu movie due to serial shoot, serial actress shilpa mary teresa, shilpa mary teresa instagram, shilpa mary teresa wiki, shilpa mary teresa fb, tamil serial actress shilpa, sembaruthi serial actress shilpa, sembaruthi serial shilpa, sembaruthi serial shilpa images, sembaruthi serial episode 500, sembaruthi serial episode 1000, sembaruthi serial entry episode, sembaruthi serial episode 400, sembaruthi full episode in zee5, sembaruthi serial today promo, sembaruthi timing today episode, sembaruthi serial today episode share chat, director bala wife, director bala wife and ops son, director bala age, director bala community, director bala instagram, சீரியல் நடிகை ஷில்பா, ஷில்பா சீரியல், செம்பருத்தி சீரியல் ஷில்பா, இயக்குநர் பாலா ஷில்பா, நடிகை ஷில்பா சீரியல்கள்
நடிகை ஷில்பா

சன் டிவி எதிர்நீச்சல் சீரியலால் வெடித்த சர்ச்சை... இயக்குநர் திருச்செல்வம் சொல்வது என்ன?

பல சீரியல்களில் வில்லி, போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஷில்பா. சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் நடித்து வந்த அவர், கொரோனா பெருந்தொற்றால், அதிலிருந்து விலகினார். இதனால் சின்னத்திரையில் இருந்து சில காலம் பிரேக் எடுத்தார். அதோடு அந்த சமயத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தபோதும், வேண்டாம் என தவிர்த்திருக்கிறார். தற்போது இடைவெளிக்கு குட் பை சொல்லிவிட்டு, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார்.

Actress Shilpa missed Director Bala and Vikram Sethu movie due to serial shoot, serial actress shilpa mary teresa, shilpa mary teresa instagram, shilpa mary teresa wiki, shilpa mary teresa fb, tamil serial actress shilpa, sembaruthi serial actress shilpa, sembaruthi serial shilpa, sembaruthi serial shilpa images, sembaruthi serial episode 500, sembaruthi serial episode 1000, sembaruthi serial entry episode, sembaruthi serial episode 400, sembaruthi full episode in zee5, sembaruthi serial today promo, sembaruthi timing today episode, sembaruthi serial today episode share chat, director bala wife, director bala wife and ops son, director bala age, director bala community, director bala instagram, சீரியல் நடிகை ஷில்பா, ஷில்பா சீரியல், செம்பருத்தி சீரியல் ஷில்பா, இயக்குநர் பாலா ஷில்பா, நடிகை ஷில்பா சீரியல்கள்
செம்பருத்தி சீரியலில் ஷில்பா

படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் சீரியல்களில் நடிக்கும் போதே திரைப்படங்களிலும் நடித்ததாகவும். நிறைய முறை சீரியலால் சினிமா வாய்ப்பு பறிபோனதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ”நான் பல சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணி இருக்கிறேன். அதில் ஒன்று விக்ரம் சாரின் சேது படம். பாலா சார் என்னை தாவணி கட்டிட்டு வந்து சந்திக்க சொன்னார். ஆடிசன் முடிந்து பத்து நாள் கழித்து, நீங்கள் என் படத்தில் இருக்கிறீர்கள், படம் முடிய ஒரு வருடம் வரைக்கும் கூட ஆகலாம். ஆனால், அதுவரைக்கும் நீங்கள் சீரியலில் நடிக்க கூடாது என்று சொன்னார். அப்போது எனக்கு சீரியலில் நிறைய வாய்ப்புகள் வந்தன. அதனால் படத்தை மிஸ் பண்ணிட்டேன்” என்றார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Director bala