• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் சீசன்-5ல் பிரபல ஜீதமிழ் சீரியல் நடிகை பங்கேற்கிறாரா?

பிக்பாஸ் சீசன்-5ல் பிரபல ஜீதமிழ் சீரியல் நடிகை பங்கேற்கிறாரா?

பிக் பாஸ்

பிக் பாஸ்

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் மேலும் ஒரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வெகு விரைவில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. நிகழ்ச்சிக்கான செட் எல்லாம் எப்போதோ வடிவமைக்கப்பட்டு விட்டது என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன டிவி என்றால் அது விஜய் டிவி தான். சூப்பர் சிங்கர் முதல் காமெடி, கேம் ஷோ வரை இவர்களின் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை தவிர மக்கள் அனைவருக்கும் பிடித்தமான மற்றொரு ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி டிஆர்பி-யில் எப்போதுமே முதலிடத்தை பிடிக்கும். மேலும் கடந்த 4 சீசன்களாக கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 5வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி நடத்துவது குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வெளியானாலும் இப்போது வரை ரசிகர்களின் ஆதரவை பெற்றுவரும் ஒரே ஷோவாக இருக்கிறது. இந்த நிலையில் 5வது சீசன் எப்போது ஒளிபரப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதில் இந்த முறை பிக் பாஸ் லோகோ பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்த நிலையில் நிகழ்ச்சி குழுவினர் வரும் அக்டோபர் இறுதி வாரத்தில் 5வது சீசனை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக புரொமோக்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது குழு. இதுவரை 2 புரொமோ வெளிவந்துள்ளன. அடுத்தும் சில புரொமோக்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சில மாதங்களாகவே இந்த சீசனில் யார் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற பட்டியல் இணையத்தில் வளம் வந்து கொண்டிருந்தன. அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

Also read... அத்தனை படத்தில் நடித்தும் கிடைக்காத புகழ் சன் டிவி சீரியல் மூலம் கிடைத்தது : மனம் திறந்த நடிகர்!

Priya Raman to quit Zee Tamil's Sembaruthi Serial, sembaruthi serial, sembaruthi serial today episode, sembaruthi zee tamil, zee tamil sembaruthi, sembaruthi serial today, sembaruthi serial shabana, செம்பருத்தி சீரியல், ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல், ஜீ தமிழ் செம்பருத்தி, sembaruthi wikipedia, sembaruthi episode 1, sembaruthi serial episode 500, sembaruthi instagram, sembaruthi full episode in zee5, sembaruthi serial new hero, sembaruthi zee 5, sembaruthi serial priya raman, priya raman wikipedia, priya raman age wikipedia, priya raman birthplace, priya raman ranjith instagram, priya raman instagram, priya raman ranjith marriage, priya raman husband renjith age, பிரியா ராமன் செம்பருத்தி சீரியல், செம்பருத்தி அகிலாண்டேஸ்வரி

ஆனால் இந்த பட்டியல் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பிக்பாஸ் சீசன் 5-ல் கோபிநாத் ரவி என்ற மாடல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் மேலும் ஒரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அது வேறுயாருமில்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் செம்பருத்தி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கும் பிரியா ராமன் தான். இவர் சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக செய்திகளும் வெளியாகியுள்ளன. அந்த சீரியலில் இருந்து வெளியேறி பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: