Home /News /entertainment /

இஸ்லாமிய பெண் இப்படி நடிக்கலாமா? தடைகளை எதிர்த்து ஜெயித்த செம்பருத்தி பார்வதி!

இஸ்லாமிய பெண் இப்படி நடிக்கலாமா? தடைகளை எதிர்த்து ஜெயித்த செம்பருத்தி பார்வதி!

செம்பருத்தி பார்வதி

செம்பருத்தி பார்வதி

இந்து பையனுடன் நடிப்பது, காதல் காட்சிகள் நடிப்பது என ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளதாம்

    இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து பல்வேறு தடைகளை தாண்டி நடிகை ஷபானா ஜெயித்த கதை தெரியுமா?

    தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலே தனக்கென தனி இடத்தை பிடித்து மிகப் பெரிய அளவில் சின்னத்திரையில் ரீச் ஆனவர் நடிகை ஷபானா. ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான் தமிழில் இவருக்கு முதல் சீரியல். இதில் பார்வதியாக நடித்தவர் ரசிகர்கள் மனதில் பார்வதியாகவே வாழ்ந்து வருகிறார். இவர் பிறந்தது கேரளா என்றாலும் படித்தது வளர்ந்தது எல்லாமே மும்பை தான். மும்பையில் உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் படித்த இவர், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

    2016ல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடர் தான் ஷ்பானாவின் முதல் சின்னத்திரை அறிமுகம். பின்னர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகையானார். செம்பருத்தி சீரியலில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார்.தனது நடிப்பு திறமையால் எண்ணற்ற விருதுகளையும் வாங்கி குவித்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஷபானா சிறுவயதிலே தந்தையை இழந்தார். அம்மா மற்றும் தம்பியுடன் மும்பையில் வசித்து வந்தபோது நடிப்பு வாய்ப்பு அவரை தேடி வந்தது. டான்ஸ் என்றால் ஷபானாவுக்கு உயிர். மும்பையில் பல பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதுமட்டுமில்லை பல நிகழ்ச்சிகளை ஆங்கரிங் செய்துள்ளார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    SHABANA SHAJAHAN ⭐️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@its_shabana_)






    ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடிக்க சென்றது குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கவில்லை. ஷபானாவின் அம்மா மட்டுமே அவருக்கு துணையாக நின்று உறவினர்களை பேச்சுகளை சகித்து கொண்டு மகளின் வெற்றிக்காக கூடவே துணையாக நின்றுள்ளார். அதுமட்டுமில்லை ஷபானா சீரியலில் பொட்டு வைத்து இந்து பெண் போல் நடிப்பது, இந்து பையனுடன் நடிப்பது, காதல் காட்சிகளில் நடிப்பது என ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளதாம் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு தான் தனக்கு பிடித்த நடிப்பு தொழிலை நேசித்து செய்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Zee tamil

    அடுத்த செய்தி