• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • செம்பருத்தி பார்வதியின் அவசர கல்யாணத்திற்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா? ஷபானாவின் அம்மா , தம்பி எங்கே?

செம்பருத்தி பார்வதியின் அவசர கல்யாணத்திற்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா? ஷபானாவின் அம்மா , தம்பி எங்கே?

செம்பருத்தி பார்வதி க்ல்யாணம்

செம்பருத்தி பார்வதி க்ல்யாணம்

செம்பருத்தி பார்வதி - ஆர்யன் திருமணத்தில் ஷபானாவின் பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

  • Share this:
    செம்பருத்தி சீரியலில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார் ஷபானா. 

    மும்பையை சேர்ந்த பிரபலமான நடிகை ஷபானா ஷாஜஹான் தமிழ், மலையாள சின்னத்திரையில் முன்னிலை வகிக்கிறார். இவர் 2016ல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகையானார். செம்பருத்தி சீரியலில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார்.

    சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தனியாகவும், தனது தோழிகளுடனும் போட்டோஷூட் எடுத்து அழகாக புகைப்படங்களை ஷேர் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 735k பேர் பாலோ செய்கிறார்கள்.

    நடிகை ஷபானா காதலிப்பதாக தொடர்ந்து நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்யனிடம், “நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா?” என ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்யன், “ஷபானா... இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என நடிகை ஷபானாவின் ப்ரொபைல்-ஐ டேக் செய்து கேட்டிருந்தார். இதனை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த ஷபானா, பதில் ஏதும் சொல்லாமல் ‘மைன்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலில் இருப்பது உறுதியானது.

    பின்னர் இருவரும் கையில் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை ஆர்யன் அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? என கேள்வி எழுப்பி வாழ்த்துக்கள் கூறி இருந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    இந்தநிலையில், கடந்த நவம்பர் 11ம் தேதி ஷபானா ஷாஜஹான் திருமண கோலத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனக்கு கல்யாணம் நடக்க போவதாக கண்ணீர் மல்க அறிவித்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் ஏன் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    டிக் டாக் ஸ்ரேயா ரெட்டி டூ சீரியல் வாய்ப்பு.. யார் இந்த புது கண்ணம்மா வினுஷா தேவி?

    ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் தான் அவசர அவசரமாக திருமணத்தை முடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர்களது திருமணத்தில் ஷபானாவின் பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.




    இந்த கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருக்க ஷபானா - ஆர்யன் ஜோடி திருமணத்திற்கு பிறகு போட்டோஷூட் நடத்தி கூலாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். மேலும் ஷபானாவின் தோழி ரேஷ்மா - மதன் திருமணத்தில் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: