• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "கடவுள் எனக்கு கொடுத்த வரம் நீ".. கடைசியாக அந்த தகவலை உறுதி செய்த செம்பருத்தி பார்வதி!

"கடவுள் எனக்கு கொடுத்த வரம் நீ".. கடைசியாக அந்த தகவலை உறுதி செய்த செம்பருத்தி பார்வதி!

செம்பருத்தி பார்வதி

செம்பருத்தி பார்வதி

முதன்முறையாக தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்

  • Share this:
    மும்பையை சேர்ந்த பிரபலமான நடிகை ஷபானா  தமிழ், மலையாள சின்னத்திரையில் முன்னிலை வகிக்கிறார்.

    மும்பையில் உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் படித்த இவர், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2016ல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகையானார். செம்பருத்தி சீரியலில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார்.

    தனது நடிப்பு திறமையால் எண்ணற்ற விருதுகளையும் வாங்கி குவித்தார். Behindwoods விருது, ஆனந்த விகடன் விருது, கலாட்டா நட்சத்திர விருது, விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி என்ற பிரிவில்தொடர்ந்து மூன்று முறை ஜீ தமிழ் குடும்பம் விருதுகளை வாங்கியுள்ளார். இவர் தீவிர விஜய் ரசிகர் ஆவர். சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தனியாகவும், தனது தோழிகளுடனும் போட்டோஷூட் எடுத்து அழகாக புகைப்படங்களை ஷேர் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 607k பேர் பாலோ செய்கிறார்கள்.

    கடந்த சில நாட்களாக சேலையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அவ்வப்போது மாடர்ன் உடையிலும், தனது ஷூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் லைக் மற்றும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஷபானா காதலிப்பதாக தொடர்ந்து நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் புகழ், நடிகர் ஆர்யனை அவர் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், தொடந்து கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டே இருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்யனிடம், “நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா?” என ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்யன், “ஷபானா... இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என நடிகை ஷபானாவின் ப்ரொபைல்-ஐ டேக் செய்து கேட்டிருந்தார். இதனை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த ஷபானா, பதில் ஏதும் சொல்லாமல் ‘மைன்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலில் இருப்பது உறுதியானது. பின்னர் ஆர்யன் இரண்டு கைகளிலும் ஒரே மாதிரியான மோதிரங்கள் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்திருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? என கேள்வி எழுப்பி வாழ்த்துக்கள் கூறி இருந்தனர்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    𝑺𝑯𝑨𝑩𝑩𝑶 🌸 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@its_shabana_)






    இதனை தொடந்து ஷபானாவின் தோழி பிறந்தநாள் கொண்டாடத்தில் ஆர்யன் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் முதன்முறையாக தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் ஷபானா. இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ள ஆர்யன் "கடவுள் எனக்கு கொடுத்த வரம் நீ" என குறிப்பிட்டுள்ளார். இருவரும் அழகாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். தற்போது செம்பருத்தி சீரியலில் ஷாபனா பிசியாக நடித்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: