Home /News /entertainment /

காதல் கணவருக்காக செம்பருத்தி பார்வதி செய்த காரியம்.. தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்

காதல் கணவருக்காக செம்பருத்தி பார்வதி செய்த காரியம்.. தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்

செம்பருத்தி பார்வதி

செம்பருத்தி பார்வதி

செம்பருத்தி பார்வதி நெட்டிசன்களுக்கு சிறப்பான வைரல் கன்டென்ட் ஒன்றை ஷபானா தந்துள்ளார்

    ஒரு சில வாரங்களாக சின்னத்துரை பிரபலங்களின் திருமணங்கள் தான் சமூக ஊடங்கங்களில் பேசுபொருளாக மாறி இருந்தது. எந்த பக்கம் திரும்பினாலும் சின்னத்திரை பிரபலங்களின் திருமண புகைப்படங்கள், நேர்காணல்கள், அவர்களின் ரசிகர்கள் வாழ்த்து மடல்கள், பேஸ்புக் பதிவுகள், இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் என நெட்டிசன்கள் தெறிக்க விட்டிருந்தனர்.

    அந்த வகையில் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரபலமான செம்பருத்தி நாடகத்தின் கதாநாயகியான ஷபானாவிற்கு இந்த மாத நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் ஆகியது. ஷபானா தனது அழகிய நடிப்பினால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். இவரின் அன்பான குணத்திற்கு ஏற்ப சிறந்த துணையை தான் ஷபானா கரம் பிடித்துள்ளார்.

    விஜய் டிவியின் பாக்கியலட்சுமி நாடகத்தில் நடித்து வரும் ஆரியனை தான் ஷபானா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்து வந்த நீண்ட கால நட்பானது காதலாக மலர்ந்தது. இந்நிலையில் இருவருக்கிடையில் உள்ள உறவை பற்றி பல வதந்திகள் பரவி வந்தன. ஒருவழியாக அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரின் உறவை பற்றி குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவரும் காதல் உறவில் உள்ளனர் என்பதை தெரிவித்து கொண்டனர்.

    பிறகு தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். இவர்களின் திருமண விழாவில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். ஷபானாவின் ரசிகர்கள் சமூக ஊடங்களில் இவர்களது திருமண புகைப்படங்களை பகிர்ந்து வைரலாக்கினர்.

    அந்த வகையில் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பில் இருந்தே நடிகை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரியனுடன் சேர்த்திருந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். தற்போது திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் ஜோடியாக உள்ள திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.




    இந்நிலையில் நெட்டிசன்களுக்கு சிறப்பான வைரல் கன்டென்ட் ஒன்றை ஷபானா தந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பெயரை இவர் மாற்றி உள்ளார். திருமணத்திற்கு முன் 'SHABANA SHAJAHAN' என்று இவரின் இன்ஸ்டாகிராம் பெயர் இருந்தது. தற்போது 'SHABANA SHAJAHAN ARYAN' என்று தனது கணவர் பெயரையும் சேர்த்து கொண்டு மாற்றி உள்ளார். இதை அறிந்த நெட்டிசன்கள் உடனே இந்த பெயர் மாற்றத்தை வைரலாக்கி விட்டனர். நடிகை ஷபானாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். இவர் இதுவரை 433 பதிவுகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எது எப்படியோ ஷபானா ஆரியன் ஜோடி பொருத்தம் மிக பிரமாதமாக உள்ளது. இவர்களின் காதல் என்றென்றும் நிலைத்திருந்து சிறப்பான வாழ்வை வாழ வாழ்த்துவோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Sembaruthi Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி