ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செம்பருத்தி பார்வதி - ஆர்யன் ஜோடிக்கு என்ன ஆச்சு? காதல் திருமணத்தில் புயலை கிளப்பும் பிரச்சனை!

செம்பருத்தி பார்வதி - ஆர்யன் ஜோடிக்கு என்ன ஆச்சு? காதல் திருமணத்தில் புயலை கிளப்பும் பிரச்சனை!

செம்பருத்தி பார்வதி - ஆர்யன்

செம்பருத்தி பார்வதி - ஆர்யன்

செம்பருத்தி பார்வதி - ஆர்யனுக்கு திருமணம் ஆகி சில நாட்களே ஆகும் நிலையில் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  மும்பையை சேர்ந்த பிரபலமான நடிகை ஷபானா ஷாஜஹான் தமிழ், மலையாள சின்னத்திரையில் முன்னிலை வகிக்கிறார். இவர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகையானார். செம்பருத்தி சீரியலில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார்.

  சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தனியாகவும், தனது தோழிகளுடனும் போட்டோஷூட் எடுத்து அழகாக புகைப்படங்களை ஷேர் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

  நடிகை ஷபானா காதலிப்பதாக தொடர்ந்து நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரியனை ‘மைன்’ என அவரது இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலில் இருப்பது உறுதியானது.

  பின்னர் இருவரும் கையில் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை ஆர்யன் அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? திருமணம் எப்போது என கேள்வி எழுப்பி வந்தனர்.

  also read.. பிரியங்கா இடத்தில் சிவாங்கி? விஜய் டிவி எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

  இந்நிலையில், கடந்த நவம்பர் 11ம் தேதி ஷபானா ஷாஜஹான் திருமண கோலத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனக்கு கல்யாணம் நடக்க போவதாக கண்ணீர் மல்க அறிவித்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் ஏன் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுந்தது.

  ஷபானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் தான் அவசர அவசரமாக திருமணத்தை முடித்து விட்டார் என்றும் தகவல் வெளியானது. அதுமட்டும் இல்லாமல் இந்த திருமணத்தில் ஆர்யன் வீட்டாருக்குச் சுத்தமாக விருப்பமே இல்லை என்பதால் திருமணத்தில் அவரது பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

  இதையும் படிங்க.. மீனாவுக்கு வந்த அடுத்த சோதனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இனி எல்லாமே ஐஸ்வர்யா தான்!

  இருவருக்கும் திருமணம் ஆகி சில நாட்களே ஆகும் நிலையில் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. திருமணம் நிறைவடைந்தாலும் ஆர்யனுடைய வீட்டுல இந்த கல்யாணத்தை தற்போது வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகியும் ஷபானா, ஆர்யன் வீட்டுக்கே போகலை என்றும் கூறப்படுகிறது.


  மேலும் இருவரும் தேனிலவுக்காக புதுச்சேரி சென்ற நிலையில் மறுநாளே திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷபானா மிகவும் விரக்தி உடன் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை போட்டிருந்தார். அதில், நாம எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம் என குறிப்பிட்டிருந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Sembaruthi Serial, TV Serial, Zee Tamil Tv