Home /News /entertainment /

சன் டிவிக்கு வந்த செம்பருத்தி சீரியல் நடிகை.. அப்ப சீரியலில் இனி வில்லி இல்லையா?

சன் டிவிக்கு வந்த செம்பருத்தி சீரியல் நடிகை.. அப்ப சீரியலில் இனி வில்லி இல்லையா?

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

இனி இவர் தாலாட்டு தொடரில் தாராவாக நடிக்க போகிறார். பிப்ரவரி 3 ஆம் தேதியில் இருந்து மலருக்கு பதிலாக மௌனிகா தான் நடிக்க உள்ளார்

    சின்னத்திரையில் பல நடிகர்கள் இருந்தாலும் அவர்களில் மிக சிலரே குறுகிய காலத்தில் மக்களின் மனதை கவர்ந்து விடுவர். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் நடிப்பு திறனும், இயல்பான கதாபத்திர தேர்வும், சிறப்பான உடை அலங்காரம் போன்றவை தான். குறிப்பாக பெண் நடிகைகளை பல இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மௌனிகாவையும் பலருக்கும் பிடிக்கும்.

    இவர் சில குறிப்பிட்ட சீரியல்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது சன் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்றான 'தாலாட்டு' சீரியலில் நடிக்க உள்ளார். இந்த தொடரில் கிருஷ்ணா - ஸ்ருதி ஆகிய இருவரும் சிறப்பாக நடித்து வருகின்றனர். இவர்களின் சிறந்த நடிப்பினால் பலரின் கவனத்தை இந்த தொடர் பெற்றுள்ளது. இந்த சீரியலில் தாரா என்கிற கதாபத்திரத்தில் செய்தி தொகுப்பாளினி மலர் நடித்து வந்திருந்தார். தற்போது வரையில் இந்த தொடர் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

    குறிப்பாக மலரின் கதாபத்திரம் எதிர்மறையான ஒன்றாக இருந்தாலும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. வேறு சில வாய்ப்புக்கள் அவருக்கு கிடைத்த காரணத்தால் அவர் சில காலங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க வருவார் என்று மக்கள் எதிர் பார்த்திருந்த நிலையில், செம்பருத்தி தொடர் நடிகை வர உள்ளார் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.

    செம்பருத்தி நந்தினி


    செம்பருத்தி சீரியலில் நந்தினி பாத்திரத்தில் நடித்து வரும் மௌனிகா தான் தற்போது மலரின் தாரா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவல் அதிகார பூர்வமாக சின்னத்திரை வட்டாரங்களில் உறுதியாகி உள்ளது. மௌனிகா ஏற்கனவே 'வானத்தை போல', மற்றும் 'ரெட்டை ரோஜா' ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

    இதையும் படிங்க.. சன் டிவி செய்தி வாசிப்பாளருக்கு ரசிகர்களிடம் இருந்து இப்படியொரு கோரிக்கையா?

    இனி இவர் தாலாட்டு தொடரில் தாராவாக நடிக்க போகிறார். பிப்ரவரி 3 ஆம் தேதியில் இருந்து மலருக்கு பதிலாக மௌனிகா தான் நடிக்க உள்ளார். தற்போது செய்தி தொகுப்பாளினி மலர் செய்தி வாசிப்பாளர் பணியையே தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வப்போது இவர் இன்ஸ்டாகிராமில் செய்தி வாசிப்பு பற்றிய புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இவரின் செய்தி வாசிப்பிற்காகவே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. எனவே மலர் பதிவிடும் பதிவுகளை நெட்டிசன்கள் சில நேரங்களில் வைரலாக்கவும் செய்வார்கள்.

    எது எப்படியோ இனி மலருக்கு பதில் மௌனிகாவை தாலாட்டு சீரியலில் தவறாமல் பார்க்கலாம். இவரும் சிறப்பாக நடிக்க கூடிய சின்னத்திரை நடிகை தான். இவர் இந்த தொடரின் மூலம் மீண்டும் மக்களின் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி