• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றியிருக்கிறீர்கள்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை ஷபானா!

பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றியிருக்கிறீர்கள்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை ஷபானா!

செம்பருத்தி சீரியல் ஷபானா

செம்பருத்தி சீரியல் ஷபானா

நடிகை ஷபானா சமீபத்தில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

  • Share this:
ஜீ தமிழ் சேனலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு சீரியலாக அவர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1150-க்கும் ஏற்பட்ட எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிகை ப்ரியா ராமன், அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் நடிகை ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார்.

இவர் எப்பேதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவரை இன்ஸ்டாவில் சுமார் ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். பல லட்சணக்கான தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த நடிகை ஷபானா, ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஆர்யனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே நடிகை ஷபானா சமீபத்தில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் ஃபோட்டோ ஒன்றை ஷேர் செய்து, தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். என் அருமையான குடும்பத்திற்கு (ரசிகர்களுக்கு) என்று கேப்ஷனிட்டு, ஆகஸ்ட் 29 அன்று எனது சிறந்த பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு இதை எழுதுகிறேன்.

Also read... கலர்ஸ் தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ள Mr,Chennai பிரபலம்.. எந்த சீரியல் தெரியுமா?

தயவுசெய்து இதை உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறும் அடையாளமாக ஏற்று கொள்ளுங்கள் என்று கேட்டு கொண்டு பின்வருபவற்றை பதிவிட்டுள்ளார். "எனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட என் அன்பான ரசிகர் குடும்பம் எடுத்த முயற்சியால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என் பலத்தின் ஆதாரம் ரசிகர்களாகிய நீங்கள் தான்.




எனவே தொடர்ந்து நான் உங்களை மகிழ்விப்பேன் மற்றும் உங்களை பெருமைப்படுத்துவேன் என்று உறுதியாக கூறுகிறேன். நான் உங்களுக்கு முக்கியமானவள் என்பதை நினைவூட்டும் வகையில் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. நீங்கள் என் மீது பொழிந்த அன்பு என் பிறந்தநாளை சிறப்பாக மாற்றியது. உங்களது நிபந்தனையற்ற அன்பு என்னை உலகின் உச்சத்தில் இருப்பது போல உணர வைத்தது. இதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லி கொள்வதோடும் மற்றவற்றை செயல்களில் காட்டுகிறேன். அன்புடனும் நன்றியுடனும் என்று தெரிவித்துள்ளார்.அவரது அந்த பதிவு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: