ஜீ தமிழின் மெகா ஹிட் சீரியலான செம்பருத்தி தொடர் வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த வெற்றி தொடரின் கிளைமாக்ஸ் தொடர்ந்து 4 மணி நேரம் , 16 திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகவுள்ளதாக புரமோ வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நடிகை ப்ரியா ராமன், அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். செம்பருத்தி சீரியல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு சீரியலாக அவர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது கிளைமாக்ஸை எட்டியுள்ளது.
பிரபல சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் வில்லாதி வில்லி வந்தனா!
செம்பருத்தி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. முதலில் ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். பின்பு அந்த ரோலில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதே போல் அகிலாண்டேஸ்வரியின் இளைய மருமகள் ஐஸ்வர்யா ரோலில் நடிகை ஜனனி அசோக் நடித்து வந்தார். பின்பு அவரும் சீரியலில் இருந்து விலக்கப்பட்டார். இப்படி பல்வேறு மாற்றங்கள் ஒருபக்கம் நடந்தாலும் இன்று வரை சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது.
நான் தான் அந்த கபிலன்.. கயலிடம் உண்மையை போட்டுடைக்கும் எழில்!
இதுவரை பார்வதிக்குஆதி 3 முறை தாலி கட்டி விட்டார், அகிலாண்டேஸ்வரியும் ஆதி - பார்வதியை ஏற்றுக் கொண்டார். இப்படி க்ளைமேக்ஸை நோக்கி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க சில வாரங்களுக்கு முன்பு செம்பருத்தி சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின, இந்நிலையில் தற்போது இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் ஞாயிறு ஜூலை 31ஆம் தேதியுடன் செம்பருத்தி சீரியல் முடைவடைகிறது. தொடர்ந்து 4 மணிநேரம் இந்த தொடரின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது. அதனைத்தொடர்ந்து சீரியலின் வெற்றிக் கொண்டாட்டமும் டெலிகாஸ்ட் ஆகவுள்ளது. 16 திருப்பங்களுடன் ஜீ தமிழ் சீரியல் பிரபலங்களும் செம்பருத்தி கிளைமாக்ஸில் இடம்பெறுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரியலின் கிளைமாக்ஸ் எப்படி இருக்க போகிறது? என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.