Home /News /entertainment /

கேலி, கிண்டல், அவமானங்கள்.. விஜே அக்னி செம்பருத்தி ஆதியாக ஜெயித்த கதை!

கேலி, கிண்டல், அவமானங்கள்.. விஜே அக்னி செம்பருத்தி ஆதியாக ஜெயித்த கதை!

செம்பருத்தி ஆதி

செம்பருத்தி ஆதி

கார்த்திக் விலகுவதற்கு 1 வாரத்துக்கு முன்பு தான் அக்னியை அவரை யூடியூப் சேனலுக்காக பேட்டி எடுத்திருந்தார்.

  செம்பருத்தி சீரியலில் ஆதிகடவூர் ஆதித்யாவாக நடிக்கும் விஜே அக்னி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்.

  ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சிரீயலாக இருந்து வருகிறது. இந்த சீரியல் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்க மிக முக்கிய காரணமே ஆதி - பார்வதி இந்த ஜோடி தான். சின்னத்திரையில் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. ஆதி பார்வதி கல்யாணம் எபிசோடுகள் டி.ஆர்.பியை எகிற வைத்தனர். அந்த அளவிற்கு பீக்கில் ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியல் சமீப காலமாக பின்னடைவை சந்தித்துள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம், இதில் ஆதியாக நடித்த கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். ஆஃபீஸ் சீரியல் மூலம் புகழடைந்த கார்த்திக், செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரை ஹீரோவாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது தான் அவரின் விலகல் நிகழ்ந்தது. இதனால் சீரியலில் அடுத்த ஆதி யார்? என்ற எதிர்பார்ப்பு மேலூங்கிய போது விஜே அக்னி நட்சத்திரம் அறிமுகம் ஆனார்.

  சோஷியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு அக்னி பற்றிய அறிமுகமே தேவையில்லை. பிரபல யூடியூப் சேனலில் மூத்த ஆங்கராகவும், விஜேவாகவும் கலக்கி கொண்டிருந்தார் அக்னி. இவருக்கு ஏகப்பட்ட கேர்ள்ஸ் ஃபேன்ஸ் உண்டு. அதிலும் குறிப்பாக பிரபலங்களை பிரத்யேகமாக பேட்டி காண்பதில் அக்னி கைத்தேர்ந்தவர். விஜய், சிவகார்த்திகேயன் என பலரும் இவரின் பேச்சு திறமையை பாராட்டியுள்ளனர். அதுமட்டுமில்லை தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் பிரபாஸ், அல்லு அர்ஜூன், ராம் சரண், அமலா என பல நட்சத்திரங்களை அக்னி பேட்டி எடுத்துள்ளார். போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் என பாலிவுட் நடிகர்களையும் தமிழில் பேட்டி எடுத்துள்ளார் அக்னி. பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவரின் உரையாடல், கேள்வி கேட்பதில் இருக்கும் பொறுமை என ஆங்கரிங்கில் தனி அடையாளத்தை தேடி கொண்டார். அப்போது தான் அவருக்கு செம்பருத்தி சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

  ஆரம்பத்தில் தயங்கியவர் பின்பு சம்மதம் தெரிவித்து நடிக்கவும் தொடங்கினார். ஆனால் இதுவரை ஆதியாக கார்த்திக்கை ரசித்த ரசிகர்களால் அவ்வளவு எளிதில் அக்னியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏகப்பட்ட நெகடிவ் கமெண்டுகள். அக்னி இன்ஸ்டாவிலும் இந்த நெகடிவ் கமெண்டுகள் நிரம்பின. கேலி, கிண்டல்களும் அவரை பின் தொடர்ந்தனர். இதனால் மனமுடைந்த அக்னி ஆரம்பத்தில் நடிக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். ஆனால் நண்பர்கள் மற்றும் செம்பருத்தி குழு அவருடன் துணை நிற்க கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்து கொண்டு தற்போது சீரியலில் கலக்கி வருகிறார். இப்போது அக்னியின் நடிப்பை ரசிகர்கள் ஏற்றுகொண்டு அவரையும் ரசிக்க தொடங்கிவிட்டனர். தனது உழைப்பால் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அக்னி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

  அக்னி வாழ்வில் நடந்த சுவாரசிய திருப்பம் என்னவென்றால், செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் விலகுவதற்கு 1 வாரத்துக்கு முன்பு தான் அக்னியை அவரை யூடியூப் சேனலுக்காக பேட்டி எடுத்திருந்தார். அதில் செம்பருத்தி ஆதி ரோல் குறித்தும் பல கேள்விகளை கேட்டிருந்தார். அந்த பேட்டி ஒளிப்பரப்பாகி 1 வாரத்தில் புது ஆதியாக அதே செம்பருத்தி சீரியலில் அக்னி அறிமுகம் ஆனார். இதை அவரே எதிர்பார்க்கவில்லை. சரியான நேரத்தில் தேடி வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் அக்னி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Zee tamil

  அடுத்த செய்தி