ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் போட்டியாளர்களுடன் தனியாக பேச முடிவு எடுத்த கமல்.. ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்!

பிக் பாஸ் போட்டியாளர்களுடன் தனியாக பேச முடிவு எடுத்த கமல்.. ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்!

பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் வீட்டில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில் அமீரை தவிர மற்ற அனைவரின் குடும்ப உறவினர்களும் உள்ளே வந்து விட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நிகழ்ச்சி முடிய 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் பாச மழையில் நனைந்து தீர்த்தனர். அடுத்த வாரம் ’டிக்கெட் டூ ஃபினாலி’ டாஸ் இருப்பதால், இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் முக்கியமான டிப்ஸ் ஒன்றை தர போகிறார். அதை பற்றி அவரே புரமோவில் உறுதி செய்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. மற்ற 4 சீசன்களை போல் இந்த சீசன் சுவாரசியமாக இல்லை, போட்டியாளர்கள் டஃப் தர மாட்டுகிறார்கள் என்றெல்லாம் கமெண்ட்ஸ் பறந்தனர். ஆனால் 1 மாதத்திற்கு பின்பு பிக் பாஸ் 5 சூடுப்பிடிக்க தொடங்கியது. தாமரை செல்வி, அபிஷேக், இமான் அண்ணாச்சி , ராஜூ ஆகியோர் கன்டெண்ட் நட்சத்திரங்களாக ஜொலித்தனர். குழாய் அடி சண்டை, வாய்க்கால் தகராறு என பிரச்சனைகள் நீள, வார இறுதியில் பஞ்சாயத்தை கூட்டி கமல்ஹாசன் சரி செய்து வந்தார்.

இதையும் படிங்க...1 கோடி கொடுத்தாங்க.. நீ பார்த்த? ரசிகர்களால் கடுப்பான சர்வைவர் விஜயலட்சுமி! ஏன்?

இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கி 83 நாட்கள் முடிவடைந்து விட்ட நிலையில் இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் நடைப்பெற்றது.

இதையும் படிங்க.. முதல் நாள் சண்டை.. அடுத்த நாளே சமாதானம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கற்று தருவது இதுதான்!

மொத்த பிக் பாஸ் வீட்டில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில் அமீரை தவிர மற்ற அனைவரின் குடும்ப உறவினர்களும் உள்ளே வந்து விட்டனர். வார இறுதி நாளான இன்று (சனிக்கிழமை) கமல்ஹாசன் எபிசோடு ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் முக்கியமான குறிப்பு ஒன்றை தருகிறார்.

' isDesktop="true" id="648727" youtubeid="EvKszY3zdLU" category="television">

அதாவது, இந்த வாரம் முழுவதும் பாச மழையில் போட்டியாளர்கள் நனைந்தது போதும். மழைக்காலத்திற்கு பிறகு வெயில் காலம் வர வேண்டும், இத்தனை நாட்களாக மறைமுகமாக சில கருத்துக்களை, டிப்ஸ்களை போட்டியாளர்களுக்கு தந்து கொண்டிருந்தேன். இன்று நேரடியாக ஒவ்வொருவரையும் அழைத்து கன்ஃபெஷன் (confession) ரூமில் பேச போகிறேன் என ஒரே போடாக போடுகிறார். இந்த ட்விஸ்ட்டை கண்டிப்பாக போட்டியாளர்களும் சரி ரசிகர்களும் சரி எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இதனால் நிகழ்ச்சி குறித்து எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv