Home /News /entertainment /

உண்மையை போட்டுடைத்த வருண்.. சத்யாவுடன் சேர போகும் நேரம்!

உண்மையை போட்டுடைத்த வருண்.. சத்யாவுடன் சேர போகும் நேரம்!

சத்யா - வருண்

சத்யா - வருண்

மெளன ராகம் 2 வில் சத்யாவை வருணிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று புதிய பிளான் போடுகிறார் ஸ்ருதி.

    மெளன ராகம் 2 இன்றைய எபிசோடில் சத்யாவின் உயிரை காப்பாற்றுகிறார் வருண். அதுமட்டுமில்லை டைவர்ஸ் பற்றிய உண்மையையும் சத்யாவிடம் சொல்லிவிடுகிறார்.

    மெளன ராகம் சீரியலில் சத்யாவை கொலை செய்ய காதம்பரியின் அம்மா மல்லிகாவின் ஊருக்கு ஆளை அனுப்புகிறார். அவர்கள் சத்யாவை கத்தி முனையில் மிரட்டுகிறார்கள். அந்த நேரம் பார்த்து அங்கே வரும் வருண், அவர்களை அடித்து சத்யாவை காப்பாற்றுகிறார். கடைசி நேரத்தில் அவர்கள் வருணின் கையை அறுத்து விடுகிறார்கள். சத்யா துடித்து போகிறார். இந்த நேரத்தில் விவாகரத்து விஷயத்தை பற்றி பேசும் வருண், சத்யாவிடம் உண்மையை சொல்கிறார்.

    கேக் வெட்டி கொண்டாடிய காற்றுக்கென்ன வேலி சூர்யா - வெண்ணிலா! எதற்காக தெரியுமா?

    அப்போது பார்த்து அங்கு வரும் மல்லிகா, வழக்கம் போல் வருணை திட்டி ஊருக்கு போக சொல்கிறார். ஆனால் வருண் மீது சத்யாவுக்கு இன்னும் காதல் அதிகம் ஆகி கொண்டே செல்கிறது. அதற்குள் சென்னையில் இருக்கும் காதம்பரி அம்மாவுக்கு சத்யாவை எதுவும் செய்ய முடியவில்லை என்ற தகவல் போகிறது. கோபத்தில் ஸ்ருதியிடம் பேசுகிறார். அப்போது தான் ஸ்ருதி, சத்யாவுடன் வருண் இருக்கும் வரைக்கும் சத்யாவை எதுவும் செய்ய முடியாது என்கிறார்.

    எப்படியாவது சத்யாவை வருணிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று புதிய பிளான் போடுகிறார் ஸ்ருதி. அதன்படி தருணிடம் பேசி, வருணை கையோடு அழைத்து சென்னைக்கு வந்து விடலாம் என்கிறார். ஸ்ருதியின் திட்டத்துக்கு மனோகரும் சம்மதம் சொல்கிறார். உடனே சத்யாவின் ஊருக்கு ஸ்ருதியும் தருணும் கிளம்புகின்றனர். அதே போல் வருண் சென்னைக்கு வர மறுத்தால் அவருடன் சேர்த்து சத்யாவையும் அழைத்து வந்து விடுவேன் என்ற விஷயத்தையும் ஸ்ருதி அவரின் பாட்டியிடம் சொல்லிவிட்டு தான் கிளம்புகிறார்.

    மிகப் பெரிய வெற்றி.. சந்தோஷத்தில் சன் டிவி எதிர் நீச்சல் சீரியல் குழு!

    சத்யாவுக்கு எப்படியாவது உண்மைகளை புரிய வைத்து சென்னைக்கு வருண் அவரை அழைத்து செல்வது தான் இந்த வார கதை. இந்த ஸ்பெஷல் எபிசோடுக்காக இந்த வாரம் முழுவதும் மெளன ராகம் 2 சீரியல் 1 மணி நேரம் சிறப்பு  எபிசோடாகவும் ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி