• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாதியில் நிறுத்தப்பட்ட 2 சீரியல்கள்... ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஜீ தமிழ்!

பாதியில் நிறுத்தப்பட்ட 2 சீரியல்கள்... ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஜீ தமிழ்!

ஜீ தமிழ்

ஜீ தமிழ்

சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல்கள் நிறுத்தப்பட்டாலும் பார்ட் 2 என்ற பெயரில் மீண்டும் ஒளிபரப்பப்படலாம்

  • Share this:
    ஜீ தமிழில் ஒளிபரப்பான 2 முக்கிய சீரியல்கள் நிறுத்தப்படுதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அந்த சீரியல்கள் குறித்த அப்டேட் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.

    கொரோனா வைரஸ் பரவல் சின்னத்திரை உலகையும் புரட்டிப்போட்டது. வேகவேகமாக பரவிய கொரோனாவால் படப்பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால், சின்னத்திரை உலகமே ஸ்தம்பித்தது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் என எந்த சேனலும், இதில் இருந்து தப்பிக்கவில்லை.

    அனைத்து சேனல்களிலும் சீரியல்கள் நிறுத்தப்பட்டன. பெரிய சீரியல்கள் சில மட்டும், ஏற்கனவே எடுத்து வைத்திருந்த சில எபிசோடுகளை ஒளிபரப்பி வந்தன. சில சீரியல்கள் கம்பைன் பண்ணி, புதிய கதைகளத்தில் பயணிக்கத் தொடங்கின. சின்னத்திரை ரசிகர்களும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீரியல் பக்கம் அதிகம் தலைக்காட்டாமல் இருந்தனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சீரியல் பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தனர்.

    மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் பரவல் குறைந்தவுடன், சில கட்டுப்பாடுகளுடன் சீரியல் சூட்டிங் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனாலும், பல்வேறு பகுதிகளுக்கு செல்வதிலும், ஒரு சீரியல் சூட்டிங்கில் இருந்து மற்றொரு சீரியல் சூட்டிங் நடக்கும் பகுதிக்கு செல்வதிலும், நடிகர், நடிகைகளுக்கு பெரிய சிக்கல் இருந்தது. அவர்கள் பெரிய சீரியல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால், சின்ன சின்ன சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பை தொடங்குவதிலும், சூட்டிங் செல்வதிலும் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டன.

    இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக சன் டிவி முதல் ஜீ தமிழ் வரை, அனைத்து தொலைக்காட்சிகளும் சிக்கல்களை எதிர்கொள்ளும் சீரியல்களை பாதியிலேயே நிறுத்தினர். பல முக்கியமான சீரியல்கள் கூட விரைவில் நிறுத்தப்படலாம் என்ற தகவல் கசிந்தது. குறிப்பாக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், தொகுப்பாளினி ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கும் தேன்மொழி பி.ஏ சீரியல்கூட நிறுத்தப்படுவதாக தகவல் பரவியது. அதற்கு ஏற்றார்போல் ஸ்லாட்டுகளும் மாற்றிப் மாற்றிப்போடப்பட்டது.

    ஒரு வழியாக இப்போது 3 மணிக்கு பிறகு ஒரு ஸ்லாட் ஒதுக்கப்பட்டு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நிறுத்தப்பட்ட சில சீரியல்கள் அதே கதைக்களத்துடன் பார்ட் 2 என்ற பெயரில் மறு அவதாரம் எடுத்துள்ளன. அந்தவகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல்கள் நிறுத்தப்பட இருக்கின்றன.

    இந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இப்போது மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது. அதில், சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல்கள் நிறுத்தப்பட்டாலும் பார்ட் 2 என்ற பெயரில் மீண்டும் ஒளிபரப்பப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது. இந்த விஷயம், அந்த இரு சீரியல்களின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: