Home /News /entertainment /

உண்மையை சொன்ன சத்யா.. ஸ்ருதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

உண்மையை சொன்ன சத்யா.. ஸ்ருதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் சீரியலில் வருண் - சத்யா பிரச்சனையை முடித்து வை என கெஞ்சுகிறார்.

    மெளன ராகம் சீரியலில் சத்யாவை ஸ்ருதி பார்த்த விஷயம் மொத்த குடும்பத்திற்கும் தெரிந்துவிட்டது. சத்யாவை ஸ்ருதி ஃபோட்டோ எடுத்த விஷயத்தை ஷீலா, மனோகர் மற்றும் தருணிடம் சொல்லிவிடுகிறார்.

    மெளன ராகம் சீரியலில் வருண் கொண்ட சந்தேகத்தால் இப்போது சத்யாவும் வருணும் பிரிந்து இருக்கின்றனர். இத்தனை நாட்களாக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வருணுக்காவே அமைதியாக இருந்தார் சத்யா. காரணம், வருண் சத்யா மீது காட்டிய அன்பு, காதல் ஆனால் கடைசியில் வருணே சத்யா மீது சந்தேகம் கொள்ள ,கதை தலைகீழானது. போதும் இந்த போராட்ட வாழ்க்கை என நினைத்த சத்யா வீட்டை விட்டு கிளம்பினார். சத்யா போகும் போதும் வருண் அவரை தடுத்து நிறுத்தவில்லை. அதே சமயம் அவர் போன பிறகு அவருக்காக ஏங்கி அழுகிறார்.

    அந்த சீரியல் நடிகருடன் விஜய் சேதுபதி இவ்வளவு நெருக்கமா! வைரல் ஃபோட்டோ

    இப்படி இருக்கையில், சத்யா எங்கே போனார் என்பது கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் நேற்றைய எபிசோடில் சத்யா, தற்போது தங்கி இருக்கும் டிஜிபி பேத்தியை மியூசிக் ஸ்கூலுக்கு அழைத்து வந்ததை ஸ்ருதி பார்த்துவிட்டார். சத்யாவிடம் பேசவும் செய்தார். இப்படி இருக்கையில் இந்த விஷயத்தை ஸ்ருதி, ஷீலாவிடம் சொல்ல அவர் உடனே மனோகரிடம் சொல்லிவிடுகிறார். இந்த பக்கம் ஸ்ருதி, தன்னை பற்றிய மொத்த உண்மையையும் டிஜிபி மனைவிட்யிடம் சொல்லி கண்ணீர் விடுகிறார். ஊருக்கும் போக முடியாமல், வருணுடனும் சேர முடியாத மாதிரி தன்னுடைய நிலை மாறியதை கூறி அழ, அவரும் சத்யாவை சமாதானம் செய்கிறார்.

    உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. பெண் அரசியல் பிரபலம் கையால் விருது வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!

    இப்படி இருக்கையில் , ஸ்ருதி சொன்ன தகவலை வைத்து சத்யாவை தேட, மனோகரும், தருணும் முடிவு எடுக்கிறார்கள். ஆனால் அதையும் ஷீலா ஏதோ ஏதோ சொல்லி தடுத்துவிடுகிறார். இது எதுவுமே தெரியாமல், ஒருபக்கம் வருண், சத்யாவை நினைத்து அழுதுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த தருண், மனசு கேட்காமல் போய் பேசுகிறார்.

    பதிலுக்கு தருணிடம், வருண் கோபத்தை காட்ட அந்த இடத்தில் ஸ்ருதி வந்து இருவரையும் சமாதானம் செய்கிறார். கடைசியில் தருண், ஸ்ருதியிடம் உதவி கேட்கிறார். எப்படியாவது வருண் - சத்யா பிரச்சனையை முடித்து வை என கெஞ்சுகிறார். ஆனால் இதற்கு பிள்ளையார் சுழியே ஸ்ருதி தான் என்பது ஷீலாவை தவிர வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி