முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பழனி வைத்த போட்டியில் தோற்று போன வருண்.. கதறி அழும் சத்யா!

பழனி வைத்த போட்டியில் தோற்று போன வருண்.. கதறி அழும் சத்யா!

மெளன ராகம் 2

மெளன ராகம் 2

மெளன ராகத்தில் இனிமேல் சத்யாவுடன் ஜென்மத்துக்கும் வருணால் சேர முடியாது.

  • Last Updated :

மெளன ராகம் சீரியல் இன்றைய எபிசோடில் பழனி வைத்த போட்டியில் தோற்று விடுகிறார் வருண். வருணை, பழனி எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்த சத்யா கதறி அழுகிறார்.

மெளன ராகம் சீரியலில் சத்யாவுடன் சேர துடிக்கிறார் வருண். ஆனால் சத்யாவின் மாமா பழனி இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். நெருப்பை பார்த்து வருண் கத்துவது, பொய் சொல்லி வீட்டில் தங்கியது, சத்யாவுக்கு டைவர்ஸ் பேப்பர் அனுப்பியது என எல்லாமே வருணுக்கு எதிராக அமைய அவர், வருணை எதிரி போல் பார்க்கிறார். இதனால் சத்யாவை சென்னைக்கு வருண் உடன் அனுப்ப மறுக்கிறார். ஆனாலும் வருண் விடாமல் சத்யாவை தொடர, போன வார எபிசோடில் வருணுக்கு சவால் ஒன்று வைக்கிறார். அந்த போட்டியில் வருண் ஜெயித்தால் சத்யாவை அனுப்புவதாக கூறுகிறார்.

ராஜா ராணி 2 சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம்!

அந்த சவாலை ஏற்றுக் கொண்ட வருண் பாடும் பயிற்சி எடுத்தார். ஸ்ருதி அவருக்கு பாட்டு கற்றுக் கொடுத்தார். 24மணி நேரமும் பாட்டு பயிற்சியில் இருந்தார். வருணின் பாட்டை கேட்டு மொத்த கிராமமும் அவரை திட்டி தீர்த்தது. ஆனாலும் சத்யாவுக்காக விடாமல் எல்லா முயற்சியும் செய்தார். இன்றைய எபிசோடில் சவால் படி பாட்டு பாட மேடையும் ஏறுகிறார். கூட்டத்தை பார்த்து அவருக்கு பயம் வர பாட்டை முழுமையாக பாட முடியாமல் நின்று விடுகிறார். இதனால் பழனி ,வருண் தோற்று விட்டதாக அறிவிக்கிறார்.

கணவன் - மனைவி இனி ஒரே சேனலில்... ஷபானா - ஆர்யன் ஃபேன்ஸ் பயங்கர ஹேப்பி!

ஆனால் பழனியின் மனைவி வருணுக்கு சப்போர்ட் செய்கிறார். வருணுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கும்படி கெஞ்சுகிறார். ஆனால் பழனி அதை ஏற்பதாக இல்லை. உடனே வருணை ஊருக்கு கிளம்ப சொல்கிறார். இனிமேல் சத்யாவுடன் ஜென்மத்துக்கும் சேர முடியாது என்கிறார். வருண் எல்லோரும் முன்பும் அசிங்கப்பட்டு நிற்பதை சத்யாவால் பார்க்க முடியவில்லை கதறி அழுகிறார்.

ஆனாலும் அவரால் மாமவை எதிர்த்து பேச முடியவில்லை. இந்நிலையில் பழனி வீட்டுக்கு போகும் வருண் இன்னொரு வாய்ப்பு கேட்டு கெஞ்சுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Vijay tv