Home /News /entertainment /

பிரிய போகும் சத்யா - வருண்.. நினைத்ததை சாதித்த ஸ்ருதி!

பிரிய போகும் சத்யா - வருண்.. நினைத்ததை சாதித்த ஸ்ருதி!

சத்யா - வருண்

சத்யா - வருண்

சத்யா மீது பயங்கர காதலில் இருந்த வருணுக்கு இந்த விஷயம் பேரிடியாக விழுகிறது.

    சத்யா வருணை பிரித்தே தீருவேன் என சபதம் எடுத்திருந்த ஸ்ருதி கடைசியில் அதில் ஜெயித்து விட்டார். சத்யாவை, தருண் காதலித்த உண்மையை வருணிடம் சொல்லிவிட்டார்.

    மெளன ராகம் 2 சீரியல் மிகப் பெரிய ட்விஸ்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. வருண் - சத்யா பல பிரச்சனைகளுக்கு பிறகு இப்போது தான் வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் சத்யாவை வீட்டில் இருந்து விரட்ட ஸ்ருதி நினைத்து தன்னுடைய வில்லங்க ஆட்டத்தை ஆரம்பித்தார். கல்லூரி நாட்களில் தருண், சத்யாவை ஒருதலையாக காதலித்தார். ஆனால் அந்த விஷயம் சத்யாவுக்கு தெரியாது. இப்படி இருக்கையில், வருணை ஒரு சந்தர்ப்பத்தில் சத்யா திருமணம் செய்துக் கொண்டு தருணுக்கு அண்ணியானார்.

    சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!

    இந்நிலையில், இந்த விஷயத்தை வருணிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டி, தருணை கல்யாணம் செய்து கொண்டார் ஸ்ருதி. அதுமட்டுமில்லை இந்த கல்யாணத்தை நடத்தி வைத்ததே சத்யா தான். இப்படி இருக்கையில், சத்யா தான், கார்த்திக் - மல்லிகாவின் பெண் குழந்தை சக்தி என்ற உண்மை ஸ்ருதிக்கு தெரிந்து விட்டது. இதனால் இன்னும் சத்யா மீது ஸ்ருதிக்கு கோபம் வர, எப்படியாவது சத்யாவை வருணிடம் இருந்து பிரிக்க வேண்டும், சத்யாவை வீட்டில் இருந்து அனுப்ப வேண்டும் என முடிவு எடுத்தார்.

    எழிலை பற்றி இப்படியொரு பொய்யா? ராதிகாவை ஏமாற்றும் கோபி!

    இத்தனை நாட்களாக தருணை எந்த விஷயத்தை சொல்லி பிளாக்மெயில் செய்து வந்தாரோ, அந்த விஷயத்தை தருணே, வருணிடம் போய் சொல்லப்போவதாக சொல்ல, இந்த பிரச்சனையை பெரிதாக நினைத்த ஸ்ருதி, தருணுக்கு முன்பே வருணிடம் மொத்த உண்மையும் சொல்கிறார். ஆனால் அதிலும் சத்யாவும் தருணும் காதலித்ததாக பெரிய பொய்யையும் சேர்த்து சொல்கிறார்.



    இதைக் கேட்டு வருண் தாங்க முடியாமல் கதறி அழுகிறார்.. சத்யா மீது பயங்கர காதலில் இருந்த வருணுக்கு இந்த விஷயம் பேரிடியாக விழுகிறது. அந்த நேரம் பார்த்து கரெண்ட் போக, நெருப்பை பார்த்து வருண் பயந்து கத்துகிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இனி வருண் - சத்யாவுக்கு இடையே ரொமான்ஸ் கிடையாது தினம் தினம் சண்டை தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி