ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சத்யா சீரியலில் படையப்பா படத்தின் காட்சிகள் இடம்பெற்று இருப்பது கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு போட்டியாக ஜீ தமிழ் சேனல் சிறந்த நெடுந்தொடர்களை வார நாட்களில் காலை முதல் இரவு வரை ஒளிப்பரப்புகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழில் ஆயிஷா - விஷ்ணு சேர்ந்து நடித்த சத்யா சீரியல் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரவுடி பேபி - அமுல் பேபி ஜோடிகள் இணையத்தை கலக்கின. இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது சத்யா 2 சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதிலும் ஆயிஷா லீட் ரோலில் நடிக்க, விஷ்ணு அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் திருமணம் இந்த காரணத்தினால் நின்றதா?
கதைப்படி தற்போது சத்யாவை லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்க வைக்க அமுல் பேபியின் குடும்பத்தார் பிளான் செய்கின்றனர். அவர்கள் ரவுடியை போலியாக செட் செய்து சத்யாவிடம் பணத்தை கொடுக்க வைக்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தை சத்யா கண்டுப்பிடித்து விட்டார். ஒருபக்கம் சீரியல் கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்க மறுபுறம் சத்யா சீரியல் நெட்டிசன்களால் ட்ரோலுக்கு ஆளாகியுள்ளது.
காரணம், இந்த சீரியலில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் அப்படியே ரஜினிகாந்த நடித்த படையப்பா படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. அதாவது சத்யா அரசியல் ரவுடி ஒருவரை பார்க்க அவரின் வீட்டுக்கு செல்வார். அந்த ரவுடி சத்யாவை நிக்க வைத்து பேச , வீட்டில் இருக்கும் சேர்களை மறைத்து வைப்பார். பின்பு அவர் மட்டும் ஒரு சேரில் கால் மீது கால் போட்டு அமர்ந்து சத்யாவிடம் திமிராக பேசுவார். எங்கேயோ பார்த்த சீன் மாதிரியே இருக்குமே? அதே தான் படையப்பா படத்தில் இடம்பெறும் காட்சி தான். இங்கு ரஜினிக்கு பதில் சத்யா.
சத்யாவை மிரட்டிய ஸ்ருதிக்கு வருண் கொடுத்த மிகப் பெரிய அதிர்ச்சி!
கடைசியில், சத்யா கையில் இருக்கும் லட்டியை வைத்து மேலே இருக்கும் ஊஞ்சலை இழுத்து அதன் மேல் கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமருவார். பின்னாடி அதே ஏ.ஆர் ரகுமானின் படையப்பா பீ.ஜி.எம் ஒலிக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், திரைப்படத்தின் பெயரை சீரியலுக்கு வைத்தீர்கள், கதையின் ஒன்லைனையும் கொண்டு வந்தீர்கள், இப்போது சீனையும் அப்படியே யூஸ் செய்ய தொடங்கி விட்டீர்களா? என ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது முதல் முறை கிடையாது, இதே சத்யா சீரியலில் தெறி படத்தின் ஸ்கூல் காட்சி ஏற்கெனவே இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.