மனைவிக்கு மரியாதை.. அப்பாவான சீரியல் நடிகரின் செயலுக்கு குவியும் லைக்ஸ்!

மனைவியுடன் சசிந்தர்

”சேயையும் தாயையும் சேர்த்து தாங்கும் கரம், வரம்!"என்ற ஹைக்கூ கவிதை

 • Share this:
  சன் டிவி-யில் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன.

  அந்த வகையில் சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இரட்டை வேடங்களில் நடித்த வம்சம் சீரியல் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலில் நடிகர் விஜயகுமார், நடிகை வடிவுக்கரசி, நடிகை சீமா, ஊர்வம்பு லட்சுமி, நடிகை காவேரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல மூத்த நடிகர்கள் நடித்திருந்த வம்சம் சீரியலில் முதல் முறையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம்.

  இவர் வம்சம் சீரியலில் நந்தகுமார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின்னர் தொடர்ந்த பல சீரியல்களில் நடித்து வரும் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம், பிரியங்கா ராவ், சந்தியா, ஜெய லட்சுமி, ஷாமிலி சுகுமார் போன்ற பல பிரபலமான சின்னத்திரை நடிகர்களுடன் நடித்துள்ளார். 2017-ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான "தமிழ் கடவுள் முருகன்" சீரியலில் சிவன் மற்றும் வீரபத்திரன் வேடத்தில் நடித்தார் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். முருகப்பெருமானின் திருக்கதையை தமிழர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு தமிழ்க் கடவுள் முருகன் சீரியல் ஒளிபரப்பாகியது.

  கந்த புராணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த சீரியலில் சிவன் வேடத்தை ஏற்று நடித்ததால் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பின்னர் 2018-ம் ஆண்டு இறுதி முதல் 2019 ஜுன் வரை நடிகர்கள் அரவிந்த் ஆகாஷ், அருண் சாகர், ராதிகா, விஜி சந்திரசேகர், பானு, நிரோஷா, தேவிப்பிரியா, லதா, நேகா உள்ளிட்ட பலர் நடித்து சன் டிவி-யில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலில் முகுந்தன் என்ற கேரக்டரில் நடித்தார் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர் ரோஜா சீரியலிலும் நடித்தார். இவர் 1985-ஆம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி சென்னையில் பிறந்தவர் ஆவார். ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1-ல் நடித்த நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம், தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-விலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் மிகவும் வீரியமாக இருந்த போது திருமணம் செய்து முடித்த பல்வேறு டிவி பிரபலங்களில் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கமும் ஒருவர்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Sasindhar Pushpalingam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sasindhar.p)


  இதனிடையே சோஷியல் மீடியாவில் எப்போதும் போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து ஆக்டிவாக இருக்கும் சசிந்தர் புஷ்பலிங்கம், சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ஷேர் செய்திருந்தார். 4 நாட்களுக்கு முன்னர் கூட விரைவில் அம்மா ஆக போகும் தன் மனைவியுடன் சேர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படத்தில் இருந்து 'யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தன் கர்ப்பிணி மனைவியுடன் நடத்திய போட்டோஷூட்டைதனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் .

  "சேயையும் தாயையும் சேர்த்து தாங்கும் கரம், வரம்!"என்ற ஹைக்கூ கவிதையுடன் தங்களது போட்டோஷூட்டை ஷேர் செய்து இருக்கிறார் சசிந்தர். இதை பார்த்த அவரது ரசிகர்களள் அற்புதமான ஜோடி என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: