ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜி.வி பிரகாஷ் திரைப்பயணத்தில் முக்கியமான படம்.. கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சர்வம் தாளமயம்!

ஜி.வி பிரகாஷ் திரைப்பயணத்தில் முக்கியமான படம்.. கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சர்வம் தாளமயம்!

சர்வம் தாளமயம்

சர்வம் தாளமயம்

நாளைய தினம் கலர்ஸ் தமிழ் சேனலில் சர்வம் தாளமயம் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சர்வம் தாளமயம் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தமிழ்

  ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த இந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 6, மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள். ஒரு மிருதங்க இசை பிரமாண்டத்தின் கண்கவர் பயணத்தை பற்றிய இந்த திரைக்கதையில் ஜி.வி பிரகாஷ்  மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜீவ் மேனன் இயக்கிய இப்படத்தில் இளங்கோ குமரவேல், அபர்ணா பாலமுரளி, வினீத் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் இப்படத்தில் அந்தந்த காட்சியின் அனுபவத்தை உயர்த்தி நிற்கிறது.

  பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா?

  முதலில், பீட்டர் ( ஜி.வி பிரகாஷ்) தனது தந்தையின் தொழிலைப் நிராகரிக்கிறார். அவருக்கு அந்த உலகத்தைப் பற்றி அதிகம் ஆர்வம் இல்லாமையால் அவர் தனது சொந்த ஆசைகளில் ஈடுபடும் கவலையற்ற நபராகத் திகழ்கிறார். ஆரம்ப காலத்தில் பீட்டருக்கு சிறு தயக்கம் இருந்தபோதிலும், அவர் ஒரு பிரபல மிருதங்க கலைஞர் வேம்பு ஐயரை (நெடுமுடி வேணு) சந்திக்கிறார் மற்றும் அவரது திறமைகளில் மயங்கி அவருடைய சீடராக மாற விரும்புகிறார். அதற்கு இணையாக, ஐயரின் உதவியாளராக இருக்கும் மணியுடன் (வினீத்) போட்டி போடுகிறார். மெல்லிசை மூலம் பீட்டர் எப்படி தனது இசை பயனத்தில் சாதனை படைத்தார் மற்றும் அந்த பயணத்தில் என்னென்ன தடைகளை எதிர்கொள்கிறார் என்பது படத்தின் மீதி கதை.

  sarvam thaala mayam Colors Tamil to present the world television premiere on sunday sarvam thaala mayam movie
  சர்வம் தாளமயம்

  உலகத் தொலைக்காட்சி பிரீமியர் பற்றி இயக்குனர் ராஜீவ் மேனன் கூறுகையில், “சாதி மோதல்களுக்கு மத்தியில் இசையின் அழகை படம் ஆராய்கிறது. சர்வம் தாளமயம் படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு எனது வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது முழுக்க முழுக்க நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மற்றும் நாட்டிலுள்ள பலதரப்பட்ட கர்நாடக இசையை ஆராய்வது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. கலர்ஸ் தமிழில் படம் திரையிடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

  ஆஸ்திரேலியாவுக்கு பறந்த குக் வித் கோமாளி மணிமேகலை.. குவியும் வாழ்த்து!

  இது குறித்து நடிகர் ஜி.வி பிரகாஷ் கூறுகையில், "எனது உண்மையான வாழ்க்கையின் நடைமுறைக்கு ஏற்ற பாத்திரம் இது. ஆர்வமுள்ள இசையமைப்பாளராக நடிப்பது எனது சொந்த கஷ்டமான நாட்களைப் பற்றிய ஏக்கத்தை அளிக்கிறது, இதன் காரணமாக படமும் கதாபாத்திரமும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை ஆகும். சர்வம் தாளமயம் உலகத் தொலைக்காட்சியில், இந்த வார இறுதியில் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.” என குற்ப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், GV prakash, Tamil movies