கலர்ஸ் சண்டே கொண்டாட்டத்தில் ’சர்பத்’ படக் குழுவினர்!

கலர்ஸ் சண்டே கொண்டாட்டத்தில் ’சர்பத்’ படக் குழுவினர்!

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளூம் ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சர்பத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

 • Share this:
  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளூம் ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சர்பத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

  கலர்ஸ் தமிழின் பிரபலமான நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), இப்போது புத்துணர்வூட்டும் ஒரு புதிய பாதையில் பயணிக்க இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சியையும், கொண்டாட்டங்களாக மாற்றவிருக்கும் சிஎஸ்கே இனி வரவிருக்கும் எபிசோடுகளில், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் கேம்ஸ்களில் பல ஆளுமைகளையும், நட்சத்திரங்களையும் பங்கேற்குமாறு செய்திருக்கிறது. இதன்மூலம், கலர்ஸ் சண்டே கொண்டாட்டம், இன்னும் கூடுதல் குதூகலமானதாக புதிய அவதாரம் எடுக்கப்போகிறது. இப்புதிய பயணத்தை தொடங்கும் வகையில், வரும் ஞாயிறு ஏப்ரல் 4-ஆம் தேதியன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் சர்பத் திரைப்படத்தின் நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.

  பல பிரபலங்களை ஒன்றாக இணைத்திருக்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடு, இசை, நடனம் மற்றும் கேம்ஸ்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் நேர்த்தியான சங்கமமாக இருக்கும். பிரபல இசையமைப்பாளர் ஆஜீஸ் மற்றும் பின்னணி பாடகர்களான திவாகர், ஹரிச்சரண் மற்றும் மகாலிங்கம் ஆகியோரால் அரங்கமே அதிரப்போகிறது. இந்த திரைப்படத்திலிருந்து மனதை வருடும் மற்றும் நடனமாடச் செய்யும் அற்புதமான பாடல்களை அவர்கள் பாடவிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களான நடிகர் கதிர் மற்றும் நடிகை ரகசியா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு, ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி மகிழ்விக்கப் போகின்றனர்.

  சர்பத் திரைப்பட உருவாக்கம் குறித்த பல ஆர்வமூட்டும் துணுக்குகளை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்வதன் மூலம் படத்தின் இயக்குனர் பிரபாகரன் விறுவிறுப்பை இன்னும் அதிகமாக்குவார் என்பது நிச்சயம். பார்வையாளர்களுக்கு முழுமையான திருப்தியும், உற்சாக கொண்டாட்டமும் கிடைக்கும் என்பது உறுதி.

  சிறப்பான பொழுதுபோக்கை வழங்கும் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழ, 2021 ஏப்ரல் 4 ஞாயிறன்று இரவு 7:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.1808) and Videocon D2H (CHN NO 553). தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: